பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாரத புராணம் 245 சென்றால் ஏதோ ஒரு புராணத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று கூறினார். அவர் கூறியதை ஏற்றுக் கொண்ட முனிவர்கள் அனைவரும் முனிவர் சுதாவின் ஆசிரமத்தை நாடிச் சென்றனர். சுதா முனிவர் இவர்களை வரவேற்றார். விருந்தினர் களாகிய தங்களுக்கு வேண்டியதை முனிவர் தரவேண்டும் என்று இவர்கள் கேட்டுக் கொண்டனர். என்ன வேண்டும் என்று சுதா முனிவர் கேட்க, 'வியாசரிடம் கற்ற நீங்கள், புராணங்களின் உண்மையான ஞானத்தை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டனர். முனிவரும் அதற்கு இசைந்தார். நாரதர், சனத்குமார முனிவருக்குச் சொல்லியது தான் இந்த நாரத புராணம். புராணங்களைக் கேட்பதால் ஒருவன் செய்த பாவம் போகும். நாரத புராணத்தில் ஒரு பாடலைக் கேட்டால் கூட அன்று செய்த பாவம் போய்விடும். எனவே, நாரத புராணத்தைக் கேட்பது மிகப் பயனுடையது” என்று கூறத் தொடங்கினார். நாரத புராணத் தொடக்கம் பிரம்மாவின் பிள்ளைகளாகிய சனகர், சனந்தனர், சனத்குமாரர். சனாதனர் ஆகிய நால்வரும் ஞானத்தைத் தேடித் தவம் மேற்கொண்டிருந்தனர். ஒருமுறை பிரம்ம லோகத்தில் கங்கையின் உபநதியாகிய சீதா என்ற ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பொழுது நாரதர் அங்கே வந்து சேர்ந்தார். இவர்கள் நால்வரும் அவரை வணங்கி, "நாரதரே! தாங்கள் எங்கும் உள்ளவர், எல்லா இடங்கட்கும் சென்று சுற்றி வருபவர். எல்லா இடங்களிலும் நடைபெறும் எல்லாக் காரியங் களையும் பார்த்தவர். ஆகவே விஷ்ணு பக்தராகிய தாங்கள். விஷ்ணுவை நாங்கள் எவ்வாறு தியானிக்க வேண்டும், எவ்வாறு பூசிக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்த