பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாரத புராணம் 247 பொழுது சரஸ்வதி என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் இத்தனைப் பெயர்களைத் தாங்கியுள்ள சக்தி ஒன்றேயாகும். ஆக்கல் தொழிலை சரஸ்வதியும் பிரம்மனும் சேர்ந்தே செய்கின்றனர்; காத்தல் தொழிலை விஷ்ணுவும் லட்சுமியும் சேர்ந்தே செய்கின்றனர்; அழித்தல் தொழிலை சிவனும் பார்வதியும் சேர்ந்தே செய்கின்றனர். இந்த மூன்று பேர்களோடும் கூடிய இப்பெருஞ் சக்தியை 'மகாமாயா' என்றும், பிரகிருதி என்றும் சொல்கிறார்கள். இப்பிரபஞ்சம் என்பது, வித்தி (நிலம்); அப (நீர்); தேஜா (தி: மருத் (காற்று); வியோமா (ஆகாயம்). இப்பிரபஞ்சம் பதினான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேல் உலகங்கள் ஏழும், கீழ் உலகங்கள் ஏழும் அப்பகுதிகளாகும். இந்தப் பதினான்கு உலகங்களும் அவ்வவற்றிற்குரிய மலைகள், காடுகள், ஆறுகள் ஆகியவற் றைப் பெற்றுள்ளன. நில உலகம் ஏழு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அவையாவன: ஜம்புதுவிபம், பலக்ஷதுவிபம், ஷல்மலது.விபம், குஷதுவிபம், கிரெளஞ்சதுவிபம், சகதுவிபம், புஷ்கரதுவிபம் ஆகும். பூலோகத்தில் ஏழு கடல்கள் உள்ளன. அவை: லவண. இக்சு, சுரா, சர்பி, ததி, துக்தா, ஜலா ஆகியவை ஆகும். பாரத வர்ஷா ஜம்புதுவிபத்தில் உள்ளது. இது தெற்குப் பகுதியில் லவணக் கடலால் சூழப்பட்டுள்ளது. வடக்குப் பகுதியில் இமயமலை உள்ளது. பாரத வர்ஷா வாழ்வதற்கு கர்மபூமி என்றால் செயல்கள் நிகழ்வதற்குரிய இடம் என்று பொருளாகும். இந்தக் கர்மபூமியில் செய்யும் காரியங்களுக்குரிய பயனை அனுபவிக்கும் இடம்தான் போக பூமி எனப்படும். இந்த பாரத வர்ஷமாகிய கர்ம பூமியில் செய்யப்படும் காரியங்கள், பலாபலன்கள் இங்கே கிடைப்பதில்லை. இங்கு செய்யப்படும் நற்காரியங்களுக்குச் சொர்க்கத்தில் சென்று