பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 பதினெண் புராணங்கள் இன்பத்தை அனுபவிக்கும் பயன் கிடைக்கிறது. இங்கு செய்யப்படும் தீய காரியங்களுக்கு நரகத்தில் சென்று துன்பத்தை அனுபவிக்க வேண்டும். - பாரத பூமியில் பிறப்பதற்குப் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். மிகுந்த அளவில் நன்மைகளைச் செய்வதற்குரிய வாய்ப்பும் சந்தர்ப்பங்களும் பாரத பூமியில்தான் உள்ளன. இந்த நல்ல இடத்தில் பிறந்தும் நல்ல காரியங்களைச் செய்யாமல் இருப்பது ஒரு குடம் அமிர்தத் திற்குப் பதிலாக ஒரு குடம் விஷத்தை வாங்குவது போலாகும். சொர்க்கத்தில் சென்று இன்பம் அனுபவிக்க வேண்டுமானால், இந்தக் கர்ம பூமியில் ஓயாது ஒழியாது, ஊக்கத்துடன் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும். இவ்வாறு சொல்லியவுடன் சொர்க்கப் பயனை அனுபவிக்க வேண்டும் என்ற பயனைக் கருதியே இங்கு நற்காரியங்கள் செய்தல் கூடாது. பலனைப் பற்றிச் சிந்திக்காமல் நற் காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதே சிறப்புடையதாகும். பலனில் பற்று வைக்காமல் செயல்களில் ஈடுபடுவதை நிஷ்காம கர்மம் என்று கூறுவர். செயல்களின் பயன் அனைத்தும் விஷ்ணுவிடம் உள்ளன. மிருகண்டு முனிவரின் கதை நம்பிக்கையும், முழு ஈடுபாடும் கொண்டு செய்யப்படும் வழிபாட்டையே விஷ்ணு ஏற்றுக் கொள்கிறார். இவை இரண்டும் இல்லாதவர்கள் எவ்வளவு நைவேத்தியம் செய்து வழிபட்டாலும் விஷ்ணு அவற்றைக் கண்டு கொள்வதே இல்லை. நம்பிக்கையும் ஈடுபாடும் தாய் போன்றது. குழந்தைகள் தாயிடம் சென்று அடைக்கலம் புகுவது போல, விஷ்ணு பக்தி உடையவர்கள் அடைக்கலம் புகுவது பக்தி, ஈடுபாடு என்ற