பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


xxvii முழுவதுமாகப் பாடல் பாடலாக சிறந்த முறையில் பாடல்களாகவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது கூர்ம புராணமாகும். நைடதம் பாடிய அதிவீரராம பாண்டியர் இக்கூர்ம புராணத்தை இரண்டு காண்டங்களாகவும், 97 அத்தியாயங்களாகவும் பிரித்து 3,717 பாடல்களாகப் பாடியுள்ளார். பதினெட்டு புராணங்களின் சுருக்கத்தைத் தமிழில் எழுதி வெளியிட வேண்டும் என்ற எண்ணம் மனத்தில் இருந்து வந்தது. இம்முயற்சிக்குத் தேவையான அனைத்து நூல்களையும் தந்து உதவிய Dr. M.R.P. குருசாமி M.A., Ph.D., திரு. 1. ரவி ஆறுமுகம் B.E., M.L., I.P.S. அவர்களுக்கும் நன்றி பெரிதுடையோம். வடமொழிப் பகுதிகளில் பல சந்தேகங்களைத் தீர்த்து உதவியவர் அண்மையில் காலஞ்சென்ற உழுவல் அன்பர் டாக்டர் K.R. நஞ்சுண்டன் M.A., Ph.D. அவர்கட்கும் எங்கள் நன்றி உரியதாகும். இம்முயற்சியில் மூல நூல்களைப் படிப்பதற்கும் சுருக்கி எழுதுவதற்கும் வாய்மொழியாகக் கூறியவற்றை எழுத்து வடிவில் கொண்டு வருவதற்கும் உதவிய என் மகளார் ஞா. மீராவுக்கு என் வாழ்த்துக்கள் உரியதாகும். நூல் வடிவுபெறப் பேருதவி செய்தமையால் அவர் பெயரும் ஆசிரியர் பெயருடன் சேர்க்கப்பட்டுள்ளது. - அ. ச. ஞானசம்பந்தன்