பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/280

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நாரத புராணம் 251 விஷ்ணு பக்தர்கள் பொறாமை, காழ்ப்புணர்ச்சி என்ற இரண்டும் அற்றவர்கள். எல்லா உயிர்களையும் போற்றி அன்பு செய்பவர்கள். அவர்கள் மனம், வாக்கு, காயங்களால் மறந்தும் பிறர்க்குத் தீமையை நினைக்க மாட்டார்கள்; சொல்ல மாட்டார்கள் செய்யவும் மாட்டார்கள். அவர்கள் சமாதான விரும்பிகள். ரிஷிகள், முனிவர்கள், பெரியோர்கள் ஆகியோரிடம் அன்பு பூண்டு பணி செய்வார்கள். அவர்கள் கோயில் கட்டுதல் என்ற நற்பணியுடன் மக்களுக்குத் தேவையான குளம் வெட்டுதல், மரம் நடுதல், சாலைகள் அமைத்தல் ஆகிய தொண்டுகளையும் செய்வார்கள். அவர்கள் புராணங்களைப் படிப்பதுடன், அவற்றை விளக்கமாகப் பிறருக்கு எடுத்துச் சொல்வார்கள். உண்மையைச் சொன்னால், உண்மையான விஷ்ணு பக்தனுடைய எல்லாப் பண்புகளும் உன்னிடம் நிறைந்துள்ளன. விஷ்ணுவினால் ஆசீர்வதிக்கப்பட்ட மார்க்கண்டேயர் சலகிரமா என்ற தீர்த்தக்கரையில் பெருந்தவம் இயற்றினார். மார்க்கண்டேயர் சிரஞ்சீவித்துவத்தை விஷ்ணுவிடம் பெற்றார் என்று சில புராணங்களும், பிரம்மாவிடம் பெற்றார் என்று சில புராணங்களும் கூறுகின்றன. கங்கை - யமுனை சங்கமம் தீர்த்தங்களுள் சிறந்தது கங்கை. அடுத்த நிலையில் இருப்பது யமுனை. இவை இரண்டும் சங்கமிக்கின்ற இடம் மிக மிகப் புண்ணியமானது என்பார்கள். இந்தச் சங்கமத்தில் குளிப்பவர்கள் நோயற்ற உடம்பையும், மிக நீண்ட ஆயுளையும் பெறுவர். தேவர்கள்கூட இந்தச் சங்கமத்தில் வந்து குளிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். கங்கை, விஷ்ணுவின் பாதத்தில் இருந்து புறப்படுகிறது. யமுனை, சூரியனின் புத்ரி ஆகும். எனவே இவை இரண்டும் மிகப் புண்ணியமான தீர்த்தம்