பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 பதினெண் புராணங்கள் ஆசிரமத்திற்குப் பக்கத்தில் சென்றான். உண்ணவேண்டும் என்று அவரைப் பற்றிக் கொண்டான். முனிவரின் மனைவி தன் தவ வலிமையால் இந்த அரக்கனின் பழைய வரலாற்றைக் கூறி, "நீ செளதசா என்ற மன்னன். சாபத்தால் இந்த நிலையை அடைந்தாய். என் கணவராகிய முனிவரைத் தின்று பாவத்தை சேர்த்துக் கொள்ள வேண்டாம். அவரை விட்டு விடு' என்று கெஞ்சினாள். அரக்கனாகிய செளதசா அவள் கூறியதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அம்முனிவரைத் தின்று விட்டான். அதுகண்டு பொறாத முனிவரின் மனைவி இரண்டு சாபங்களைத் தந்தாள். முதலாவது: அரக்கனே! உன் சாபம் நீங்கி நீ செளதசாவாக ஆனபிறகும் உன் மனைவி முகத்தில் எப்பொழுது விழிக்கிறாயோ அப்பொழுதே இறந்து விடுவாய். 2. வசிட்டர் கூறிய பன்னிரண்டு வருடங்களோடு இல்லாமல், மிக நீண்டகாலம் ராட்சசனாகவே இருக்கக் கடவாய் என்பது. முனிவர் மனைவியின் இரண்டு சாபங்களையும் கேட்ட செளதசா அரக்கன். “அம்மா! நான் உங்கள் கணவரைத் தின்று ஒரு குற்றம் புரிந்தேன். அதற்கு ஒரு சாபம் தருவது நியாயம். இரண்டாவது சாபம், காரணம் இல்லாமல் உங்கள் ஆத்திரத்தின் விளைவால் கொடுத்தீர்கள். எனவே இப்பொழுது நான் உங்களைச் சபிக்கிறேன். நீங்கள் இந்த விநாடியிலிருந்து பிசாசாக மாறி அலைவாயாக’ என்று சாபம் கொடுத்தான். உடனே முனிவரின் மனைவி பிசாசாக மாறிவிட, செளதசா அரக்கனும் முனிவரின் மனைவியாகிய பிசாசும் காட்டில் அலைந்து திரிந்தனர். இறுதியாக ஓர் ஆலமரத்தடியில் இருவரும் சென்று தங்கினர். இரண்டு புதியவர்களைப் பார்த்து அந்த ஆலமரத்தில் ஏற்கெனவே இருந்த அரக்கன் நீங்கள் இருவரும் யார்? ஏன் இங்கு வந்தீர்கள்?’ என்று வினவினான். செளதசா நடந்தவற்றைக் கூறிவிட்டு "அரக்கனே! நீ யார்?" என்றான். அவன் “இதற்கு