பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாரத புராணம் 255 முன், மகத நாட்டில் சோமதத்தா என்ற பெயருடன் ஒரு பிராமணனாக வாழ்ந்தேன். ஏதோ காரணத்தால் என் குருவை மதியாமல் அவமானப்படுத்திவிட்டேன். அதன் பயனாக அரக்கனாக மாறினேன்” என்று கூற அந்த இரு அரக்கர்களும், இந்தப் பெண் பிசாசும், மரத்திலேயே வாழ்ந்தனர். ஒரு நாள் கலிங்க தேசத்து கார்கா பிராமணன் ஒருவன் அம்மரத்தடியில் தங்கினான். இரு அரக்கர்களும், பெண் பிசாசும் நாக்கைச் சப்பிக் கொண்டு, நல்ல ஆகாரம் கிடைத்தது என்று கும்மாளமிட்டனர். ஆனால் பிராமணன் ஒயாமல் சிவ நாமத்தையும், விஷ்ணு நாமத்தையும் சொல்லிக் கொண்டே இருந்ததால் இவர்கள் அவன் பக்கத்தில் நெருங்க முடிய வில்லை. இறுதியாகத் துணிவை வரவழைத்துக் கொண்டு ஒர் அரக்கன் பின்வருமாறு பேசினான். “ஒ பிராமணா! அரக்கர் களாக உள்ள நாங்கள் இருவரும், உடன் இருக்கும் பெண் பிசாசும் உன்னைக் கண்டதிலிருந்து நல்ல ஆகாரம் கிடைத்தது என மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் ஓயாமல் சிவ விஷ்ணு நாமங்களை நீ சொல்லிக் கொண்டிருப்பதால் உன்னை நெருங்க முடியவில்லை. இவ்வளவு சக்தி வாய்ந்த நீ இந்த நர்மதை ஆற்றின் புனித நீரை எடுத்து சிவ விஷ்ணு நாமத்தை உச்சரித்துக் கொண்டு எங்கள் மேல் தெளித்தால் நாங்கள் உய்தி அடைவோம்” என்று வேண்டிக் கொண்டது. பிசாசுகள் பேசுவதையும், நர்மதை நீரைப் புகழ்வதையும் கண்ட பிராமணன் ஒன்றும் புரியாவிட்டாலும் அப்பிசாசுகள் சொன்னவாறே தீர்த்தத்தை எடுத்து, அதனுடன் துளசி இலை கலந்து சிவ விஷ்ணு நாமங்களை உச்சரித்துக் கொண்டே இவர்கள் மூவரின் மேலும் தெளித்தான். உடனே அம் மூவரும் புதிய உடம்பு பெற்றனர். முனிவரின் மனைவியும், பிராமணனும் நேரே சொர்க்கம் சென்றனர். அரசனாக மாறிவிட்ட செளதசா, மனைவியின் முகத்தில் விழித்தால்