பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 பதினெண் புராணங்கள் இறக்க நேரிடும் என்ற சாபத்தை மனத்தில் இருத்தி அவளைச் சென்று பார்க்காமல் வாரணாசி சென்று, பிறகு தன் ராஜ்ஜியத்திற்குத் திரும்பினான். அதிதியின் தவம் திதியின் மரபில் வந்த வலி அசுரனாக இருந்தாலும், விஷ்ணு பக்தி மிக உடையவனாக இருந்தான். மாபெரும் வலிமை உடையவன் ஆதலால் மூன்று உலகங்களையும் வென்று, தேவர்களைத் தோல்வியுறச் செய்தான். தேவர்களும் இந்திரனும் பூவுலகில் மானுட வடிவம் கொண்டு திரிய லாயினர். அதிதியின் மரபில் வந்த தேவர்களும் இந்திரனும் வலியிடம் தோற்று மாறுவேடத்துடன் அலைந்து திரிவதை அறிந்த அதிதி, விஷ்ணுவைக் குறித்துத் தான் தவம் செய்ய வேண்டுமென்று முடிவு செய்தாள். இமயமலைக்குச் சென்று கைகளைத் துக்கிக் கொண்டு நின்றபடியே பல காலமும், ஒரு காலில் நின்றபடியே பல காலமும், அந்த ஒரு காலின் கட்டை விரலில் நின்றபடியே பல காலமும் தவம் செய்து வந்தாள். தவம் தொடங்கிய கொஞ்ச காலத்திலேயே உணவு உண்பதை விட்டுவிட்டுப் பழங்களையே உண்டாள். சில காலம் கழித்து அதையும் நிறுத்திவிட்டுத் தண்ணிரை மட்டும் குடித்து வாழ்ந்தாள். பிறகு அதையும் நிறுத்திவிட்டுக் காற்றை மட்டும் சுவாசித்து வாழ்ந்தாள். அதிதியின் கடுமையான தவம் பற்றி வலிக்குத் தகவல் போயிற்று. எப்படியாவது அதிதியின் தவத்தைக் கெடுக்க வேண்டுமென்று வலி முடிவு செய்தான். அவனுடைய ஏவலால் சில அசுரர்கள் தேவர்களைப் போல் உருமாறி அதிதி யிடம் வந்தனர். அதிதியைப் பார்த்து, “தாயே, எங்களுக்காக நீங்கள் ஏன் இவ்வளவு கடுமையான தவம் செய்கிறீர்கள்?