பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 பதினெண் புராணங்கள் கிறேன்.” என்று கேட்டுக்கொண்டான். இயமன் சொல்ல ஆரம்பித்தான். “பொதுமக்களுக்குப் பயன்படும்படியான குளம் தோண்டுவது நல்ல தர்மம். சிவன், விஷ்ணு ஆகியவர்களுக்குக் கோயில் கட்டுவது பெரும் புண்ணியம். கல்லால் கட்டினாலும் செம்பு முதலான உலோகங்களால் கட்டினாலும் புண்ணியம். ஏழைகளுக்கு உணவு, உடை, மாடுகள், ஆடுகள் முதலிய வற்றைக் கொடுப்பதும் புண்ணியமாகும். மற்ற புண்ணியத் திற்குரிய செயல்கள் மரம் நடுதல், தோட்டம் உண்டாக்கிப் பாதுகாத்தல் ஆகியவையாகும். துளசிச் செடிகளை நட்டு வளர்ப்பது பெரும் புண்ணியம். துளசி மாலை அணிவதும் புண்ணியமாகும். சிவன் அல்லது விஷ்ணு சிலைகளுக்குப் பால், நெய், இளநீர், கரும்புச் சாறு ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது பெரும் புண்ணியமாகும். சுக்கிலபட்சக் காலத்தில் பஞ்சமிதிதி, அஷ்டமி, ஏகாதசி, துவாதசி, சதுர்த்தசி, பெளர்ணமி ஆகிய திதிகளில் சிவன்-விஷ்ணு சிலைகட்குப் புண்ணிய நீரால் அபிஷேகம் செய்வது நல்லது. பசி உடையவர் கட்கு உணவும் தண்ணிரும் தருவதும் நல்லது. இப்படித் தருமம் செய்பவர்கள் நரகத்தையே எட்டிப் பார்க்க மாட்டார்கள். தன்னை அடைக்கலம் என்று அடைந்தவர்கட்கு உதவுகிறவர்கள் பெரும் புண்ணியத்தை அடைகிறார்கள். ஒருவன் பெற்ற கல்வி அறிவை மற்றவர்களுக்கு போதிப்பது பெரும் புண்ணியம் தரும். பொன், வெள்ளி முதலியவற்றையும் தேவையுள்ள வர்களுக்கும் வழங்கலாம். சிவன்-விஷ்ணு சிலைகள் செய்து தானம் செய்யலாம். புண்ணியம் செய்தவர்களுக்குச் சில அடையாளங்கள் உண்டு. இதனால் அவர்களை மற்றவர்களில் இருந்து பிரித்து அடையாளம் கண்டு கொள்ள முடியும். அந்த அடையாளங்களாவன: அவர்கள் பிறரைப் பழி தூற்ற மாட்டார்கள். அவர்கள் பொறி புலன்களைக் கட்டுப்படுத்திய வர்கள் ஆவார்கள். அவர்கள் அதிகமாக உண்ணமாட்டார்கள்.