பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/288

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நாரத புராணம் 259 அவர்கள் தன் குருவையும், விருந்தினர்களையும் நன்கு உபசரிப்பார்கள். எப்பொழுதும் விஷ்ணுவையும் சிவனையும் நினைத்துக்கொண்டேயிருப்பார்கள். பாவம் என்பது நரகத்தில் ஒருவரைக் கொண்டு செலுத்தும். பிறர் பொருளைத் திருடுவது பாவம். தருமம் முதலானவற்றைச் செய்வதாக வாக்கு கொடுத்துவிட்டுப் பிறகு செய்யாமல் பின்வாங்குவது பாவம். அகங்காரம் அடைவதும் பாவம். மருத்துவம், சோதிடம் முதலிய வற்றில் நல்ல பயிற்சி இல்லாமல் செய்வதும் சொல்வதும் பாவம். பிறர் பழி தூற்றுதல், பிறரை அவமானமாகப் பேசுதல், ஆடம்பரம், பெய் பேசுதல், பிறரை ஏமாற்றுதல், கொலை ஆகியவையும் பெரும் பாவங்களாகும். ஒரு பாவியுடன் பழகுவதும் பாவம். பாவங்களைப் போக்கத் தவம் மேற் கொள்வது நல்ல வழியாகும். “விஷ்ணு பாவம் போக்குகிறார். செய்யும் காரியங்களின் பலாபலன்களை விஷ்ணுவினிடமே விட்டுவிட வேண்டும். விஷ்ணு பக்தி மிக முக்கியமானதாகும். விஷ்ணு பக்தி பல வகைப்படும். அவை சத்துவ, ராஜச, தாமச குணங்களைப் பொறுத்து வேறுபடும். பிறருடைய அழிவுக்காக விஷ்ணுவை வேண்டுவது அதம-தாமச குணமாகும். விஷ்ணுவுக்கு வழிபாடு செய்வது போலப் பாசாங்கு செய்வது மத்தியமதாமச குணமாகும். மற்றவர்கள் வழிபாடு செய்வதைப் பார்த்துத் தானும் விஷ்ணுவை வழிபடுவது உத்தம-தாமச குணமாகும். விஷ்ணுவை வழிபட்டுப் பொன்னும் பொருளும் வேண்டும் என்பது அதம-ராஜச குணமாகும். பெரிய காரியங்களைச் செய்துவிட்டு அதனால் புகழடைய விரும்பு வதும் மத்தியம-ராஜச குணமாகும். மயக்கம், அஞ்ஞானம் என்பவற்றிலிருந்து விடுபட வேண்டும் என்பது உத்தம-ராஜச குணமாகும். தான் செய்த பாவங்களில் இருந்து விடுதலை வேண்டும் என விரும்புவது அதம-சாத்விக குணமாகும்.