பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 பதினெண் புராணங்கள் விஷ்ணு மகிழ்ச்சி அடைவார் என்று நினைத்துப் பிரார்த்தனை செய்வது மத்தியம-சாத்விக குணமாகும். எந்த ஒன்றையும் விரும்பாமல் பிரார்த்தனையைப் பிரார்த்தனைக்காகவே செய்வது உத்தம-சாத்விக குணமாகும். இங்குக் கூறப்பட்ட ஒன்பது வகை பக்திகளுக்கும் மேலாக மற்றொரு வகை பக்தி இருக்கிறது. அது உத்தமோதம பக்தி எனப்படும். அதாவது விஷ்ணுவை தியானம் செய்யும்போது, தான் வேறு விஷ்ணு வேறு என்று நினைக்காமல் ஒன்றாகவே இருப்பது உத்தமோதம பக்தியாகும்.” இவற்றை எல்லாம் கூறிவிட்டுக் கடைசியாக பகீரதனைப் பார்த்து இயமன் கூறியதாவது: “ஒ அரசனே! உன் கேள்வி களுக்கெல்லாம் விடை கூறிவிட்டேன். இப்பொழுது புண்ணியத்திற்கும் பாவத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிந் திருப்பாய். நேர்மையாகவும், விருப்பு வெறுப்பு இல்லாமலும் நடு நிலைமையோடும் ஆட்சி செய்வாயாக. சிவன், விஷ்ணு என்ற இருவரும் ஒருவரே ஆவர். இவர்களுக்குள் வேற்றுமை பாராட்டுவது மிகப் பெரிய பாவமாகும். உன்னுடைய மூதாதையர்கள் இன்னும் நரகத்தில் விழுந்து கிடக்கிறார்கள். அவருடைய சாம்பலில் நீ எப்பொழுது கங்கை வந்து பாயுமாறு செய்கிறாயோ அப்பொழுதுதான் அவர்கள் மோட்சம் போவார்கள். உசிதம் போல் செய்வாயாக’ என்று கூறிவிட்டு இயமன் போய்விட்டான். இயமன் யோசனைப்படி பகீரதன் பெருந்தவம் மேற் கொண்டு கங்கையை பூமிக்கு வரவழைப்பதற்காகத் தவம் செய்வதற்குரிய இடத்தை நாடிச் சென்றான். கோதாவரி நதிக் கரையில் பிருகு முனிவரின் ஆசிரமத்தைக் கண்டு அவரிடம் பின்வருமாறு பேசினான்: “முனிவரே! தாங்கள் மிகப் பெரிய தவசி. ஞானியும் கூட தருமத்தைப் பற்றியும் சத்தியத்தைப் பற்றியும் எனக்கு ஒன்றும் தெரியாது.