பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/291

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


262 பதினெண் புராணங்கள் தீர்த்தமாகிய நாதேஷ்வராவில் தவம் புரிய ஆரம்பித்தான். நாதேஷ்வராவில் தவத்தைத் தொடங்கிய பகீரதன், உணவு, தண்ணிர் முதலியவற்றைத் துறந்ததோடு, பிராணாயாமத்தின் மூலம் மூச்சையும் கட்டுப்படுத்த ஆரம்பித்தான். அவன் தவத்தின் ஆற்றலால் அவன் சுவாசமே நெருப்பாக வெளிவரத் துவங்கியது. இப்படித் தவம் செய்பவன் இறுதியில் விஷ்ணுவிடம் வரம் பெற்றுத் தங்களையே தேவலோகத்தில் இருந்து துரத்தி விடுவான் என்று பயந்த தேவர்கள் வடகடல் கரைக்குச் சென்று விஷ்ணுவை வேண்டினர். தேவர்களின் பயத்தைப் போக்கிய விஷ்ணு, பகீரதன் முன் தோன்றி, “பகிரதா! உன் மூதாதை யர்களை நரகத்திலிருந்து விடுவிக்க கங்கையைக் கொண்டுவரத் தவம் புரிகிறாய். அதை நான் அறிவேன். இந்த நிலையில் ஒன்றை நீ அறிந்து கொள்ள வேண்டும். சிவனும், விஷ்ணு மாகிய நானும் வேறு வேறு அல்ல. நாங்கள் இருவரும் ஒருவரே. இதை நன்றாக மனத்தில் பதித்துக் கொண்டு இப்பொழுது சிவனை நோக்கித் தவம் செய்வாயாக!” என்று கூறிவிட்டு மறைந்தார். சிவனை நோக்கி பகீரதன் தவம் செய்யத் தொடங்கிய சிறிது காலத்தில் சிவன் அவன் முன் தோன்றினார். ஐந்து தலைகள், பத்து கைகள், எலும்பு மாலைகள், பாம்பு மாலைகள், யானைத் தோல் உடை முடியில் பிறைச் சந்திரன் என்ற கோலத்துடன் சிவன் காட்சி தந்து, “பகீரதா! உன் தவத்திற்கு மகிழ்ந்தேன். நீ சகல செளகரியங்களும் பெற்றுப் பல காலம் இவ்வுலகில் வாழ்வாயாக!” என்று கூறினார். பகீரதன், ‘ஐயனே! என் மூதாதையர்கள் நரகத்தில் இருந்து விடுபடத் தேவ ரூபத்தில் பாயும் கங்காதேவி இம்மண்ணிற்கு வரக் கருணை புரிய வேண்டும்” என்றான். சிவனும், "அப்படியே ஆகட்டும்!” என்று கூறி மறைந்தார். மகிழ்ச்சியடைந்த பகீரதன்