பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாரத புராணம் 265 சுமதி, சத்யமதி ஆகிய இருவரும் ஜதீஸ்மராக்களாக அதாவது பழம் பிறப்பை அறியும் வல்லமை பெற்றவர்களாக இருந்தார்கள். அதன் பயனாக மன்னன் சுமதி, முனிவரிடம் தங்கள் பழம் பிறப்பு வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தான். முற்பிறப்பில் சுமதி மாதுலி என்ற சூத்திரனாகப் பிறந்து எல்லாத் தீய பழக்கங்களுக்கும் உறைவிடமாக இருந்தான். திருட்டு முதலிய குற்றங்களைச் செய்ததால் எல்லோரும் அவனைக் கைவிட்டு விட்டனர். எனவே அவன் காட்டில் சென்று வாழ்ந்து வந்தான். அங்கே ஒர் அழகான குளமும், விஷ்ணு கோயிலும் இருக்கக் கண்டான். அந்த இடம் மிகவும் பிடித்துப் போனதால் அங்கேயே தங்கிவிட்டான். வேட்டையைத் தொழிலாகக் கொண்டு, ஒய்ந்த நேரங்களில் அந்தக் கோயிலைப் பழுதுபார்க்கத் துவங்கினான். கோயிலில் பராமரிப்பு வேலை நடைபெறுவதை அறிவிக்க, கோயிலின் வெளிவாசலில் ஒரு கொடியைக் கட்டினான். இம் முறையில் அவன் வாழ்க்கை நடைபெறும் பொழுது, எதிர்பாராத விதமாகக் கோகிலினி என்ற வேட்டுவப் பெண் அங்கே வந்து சேர்ந்தாள். வேடர் குலத்தவளாயினும் கணவனை இழந்ததால், எல்லாரும் அவளை ஒதுக்கி விட்டனர். இந்த நிலையில் வேடன் இருக்கும் இடம் வந்த அவள் அங்கேயே தங்கி விட்டாள். இருவரும் திருப்பணி செய்த நேரம் போக எஞ்சிய நேரத்தில் குடித்துவிட்டு ஆடினார்கள். விஷ்ணுவின் எதிரே கோகிலினி நாட்டியம் ஆடினாள். இம்முறையில் அவர்கள் வாழும் பொழுது அவர்கள் இருவருமே இறந்தனர். அவர்கள் இறந்தவுடன் யமபடர்கள் அவர்களை அழைத்துப் போக வந்தனர். ஆனால் விஷ்ணுவின் பணியாளர்கள் அங்கே வந்து, அவர்கள் விஷ்ணு பக்தர்கள் என்றும், அவன் துவஜா ரோகண விரதத்தைக் கடைப் பிடித்தவன் என்றும், விஷ்ணு கோயிலைப் பழுது பார்த்ததால்