பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாரத புராணம் 267 கொஞ்சம் கொஞ்சமாக அறவழியை விட்டுவிட்டுத் தீய வழிகளில் செல்லலானேன். நாளாவட்டத்தில் வேதங்களை மறந்து அதில் சொல்லப்பட்ட வழிகளையும் மறந்து, வாழ்க்கை நடத்திப் பாவத்தைச் சேர்க்கலானேன். அந்நிலையில் என் புண்ணிய மூட்டை குறைந்து, பாவ மூட்டை வளர்ந்து கொண்டே வந்தது. ஒர் அரசனுக்கு அந்நாட்டு மக்கள் சம்பாதிக்கும் செல்வத்தில் ஆறில் ஒரு பங்கு வரியாகச் சேருகிறது அல்லவா? அதைப் போலவே என் நாட்டு மக்களும் தர்மத்தை மறந்து செய்த பாவங்களிலும் ஆறில் ஒரு பங்கு என்னை வந்து அடைவதாயிற்று. ஆகவே என்னுடைய பாவ மூட்டை விரைவில் மிகப் பெரிதாக வளர்ந்தது. இதனிடையில் ஒரு நாள் வேட்டைக்குப் போனேன். பல மிருகங்களைத் துரத்திச் சென்றதால் பசியும் தாகமும் அதிகமாயிற்று. உண்பதற்கோ ஒன்றுமில்லை. ரேலா நதிக்கரையில் ஒர் இடத்தில் பொழுது சாய்ந்து விட்டதால், அந்நதியில் குளித்துக் கரை ஏறும் பொழுது, பல யாத்ரீகர்கள் அங்கு வருவதைக் கண்டேன். அவர்கள் அனைவரும் குளித்துவிட்டு ஒன்றும் உண்ணாமல் விஷ்ணுவை வழிபடக் கண்டேன். என்னைப் பொறுத்தவரை பட்டினி இருக்க வேண்டும் என்று நினைக்கா விட்டாலும், உண்பதற்கு ஒன்றுமில்லாததால் அவர்களோடு சேர்ந்து நானும் விரதம் இருந்தேன். அன்று ஏகாதசி என்று எனக்குத் தெரியாது. மறுநாள் விடியற்காலை பசியால் இறந்து விட்டேன். யமனுடைய படர்கள் யமனுடைய சந்நிதானத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். யமன் சித்ரகுப்தனிடம் என்னுடைய கணக்கைப் பார்க்குமாறு ஆணை இட்டார். சித்ரகுப்தன், "ஐயா! தர்மகீர்த்தி என்ற பெயரில் ஆட்சி செய்த இவன் மிகத் தீயவனாகப் பெரும் பாவ மூட்டையைச் சுமந்து கொண்டு வந்திருக்கிறான். ஆனால் நேற்று ஏகாதசி விரதம் இருக்கையில் இவன் இறந்து விட்டான்” என்று கூறினான்.