பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 பதினெண் புராணங்கள் என்பதைத் தெளிவாக அறிந்து ஐக்கியப்படுவதே பிரம்ம ஞானம் எனப்படும். யோகம் யோக மார்க்கம் என்பது எட்டுப் படிகளைக் கொண்டது. முதலாவது இயமம் எனப்படும். அஹிம்சை, உண்மை, அன்பு, பிற உயிர்களிடத்தே இரக்கம், பொறிபுலன் அடக்கம் ஆகியவற்றை மேற்கொண்டு, பொறாமை, காழ்ப்புணர்ச்சி ஆகியவற்றை ஒதுக்குவதே இயமம் என்ற படி இரண்டாவது படி நியமம். மனத்துய்மை, நாம ஜெபம், தியானம், ஞான நூல்களைக் கற்றல் ஆகியவை நியமம் என்ற இரண்டாவது படி இயமம், நியமம் ஆகிய இரண்டும் உடலையும் மனத்தையும் தூய்மைப்படுத்தி, தியானத்திற்கு வழி வகுக்கிறது. தியானத்திற்கு உரிய முறையில் உடம்பை இருக்கச் செய்ய வேண்டும். அதுவே ஆசனம் எனப்படும் மூன்றாவது படி. மூன்றாவது படியில், யோகம் பயில்பவர்களுக்கு முப்பது வகையான ஆசனங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. நான்காவது படி பிராணாயாமம் எனப்படும் மூச்சுக் காற்றை கட்டுப்படுத்துவது தியானத்திற்குப் பெரிதும் உதவுகிறது. பிரத்யாகாரம் என்பது ஐந்தாவது படி. பொறிபுலன்களால் ஏற்படும் இன்ப அனுபவத்திலிருந்து மனத்தை மீட்டுக் கொண்டுவரும் படி இந்த ஐந்தாவது படியாகும். தாரணை என்பது ஆறாவது படியாகும். எங்கும் நிறைந்துள்ள விஷ்ணுவோடு ஜீவாத்மனை ஒருமுகப்படுத்தி அந்த ஒன்றுபட்ட விஷ்ணுவின் வடிவை தியானிப்பதே தாரணை எனப்படும். தாமரை மலரில் அமர்ந்திருக்கும் விஷ்ணுவின் வடிவை இடைவிடாமல் சிந்தனையில் இருத்து வதற்கு இது உதவிபுரியும். தியானம் என்பது ஏழாவது படியாகும். இந்த வடிவத்தை இடையீடு இல்லாமல் சிந்தனையில் இருத்துவதே தியானம் எனப்படும். தியானிப்பு,