பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(1. பிரம்ம புராணம்) இப்புராணம் பற்றி. பிரம்ம புராணம் என்று கூறப்படும் இப்புராணம் ஆதிபுராணம் என்றும் சொல்லப்படும். பிரம்ம புராணம் என்பது, பரப்பிரம்மத்தைப் பற்றிக் கூறுவது என்று பொருள்தரும். இதன் மூலம் இப்பொழுது கிடைக்க வில்லை. கிடைத்துள்ள பகுதி மூலத்தோடு எவ்வளவு தொடர்புடையது என்று சொல்வதற்கில்லை. ஆராய்ச்சி யாளர்கள் இப்பொழுதுள்ள பிரம்ம புராணத்தை உப புரானங்களில் ஒன்றே எனக் கருதுகின்றனர். இந்த பிரம்ம புராணம் பரப்பிரம்மத்தை விரிவாக விளக்கத் தொடங்குகிறது. தைத்திரிய உபநிடதத்தில் பிருகு வல்லி கூறும் பரப்பிரம்மம் பற்றிய இலக்கணத்தை அடியொற்றியே இந்த பிரம்ம புராணம் பேசுகிறது. “எந்தப் பரப்பிரம்மத்திலிருந்து இந்த உயிர்கள் தோன்றுகின்றனவோ, எந்தப் பரப்பிரம்மத்தின் தயவால் இந்த உயிர்கள் உலகிடை நிலை பெறுகின் றனவோ, அந்தப் பரப்பிரம்மத்தினிடமே இந்த உயிர்கள் அனைத்தும் சென்று அடைகின்றன"இதுவே பிருகுவல்லி கூறும் பரப்பிரம்மத்தின் இலக்கணம். шыц.—1