பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாரத புராணம் 27; தியானிக்கப்படும் பொருள். தியானம் என்ற மூன்றும் இதில் அடங்கி இருக்கக் காணலாம். சமாதி என்பது எட்டாவது படி. தியானிப்பவன், தியானிக்கப்படும் பொருள், தியானம் என்ற மூன்றும் மறைந்துவிடும் நிலையே சமாதி எனப்படும். காண்பான், காட்சி, காணப்படும் பொருள் என்றும் இந்த மூன்றைக் கூறலாம். காண்பானும் காட்சியும், காணப்படும் பொருள் ஒன்றி ஐக்கியமாவதே சமாதி எனப்படும். இந்நிலையில் பொறிபுலன்களால் ஏற்படும் அனுபவங்கள் முற்றிலும் மறைந்து, பிரம்மம் ஒன்று மட்டுமே நிற்கும். அதுவே சமாதி நிலையாகும். தேவமாலி ரைவத நாட்டில் தேவமாலி என்றொரு பிராமணன் வாழ்ந்து வந்தான். ஏகப்பட்ட உறவினர்கள், பிள்ளைகள், மனைவி என்பவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவனுக்கு இருந்தது. ஆகவே அவன் வாணிபம் செய்யப் புறப்பட்டான். ஒரு பிராமணன் எந்தெந்தப் பொருட்களைக் கையால் கூடத் தொடக் கூடாதோ அந்தப் பொருட்களையே அவன் வியாபாரம் செய்தான். அளவற்ற செல்வத்தைக் குவித்தான். அந்த முதிர்ந்த வயதில் அவனுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். யக்ஞமாலி, சுமாலி என்பது அவர்கள் பெயர். அவர்களுக்கும் இந்தத் தீண்டத் தகாத பொருட்களை எப்படி விற்றுப் பணம் சம்பாதிப்பது என்று சொல்லிக் கொடுத்தான். ஒருநாள் தன்னிடம் இருந்த பொன்னை எல்லாம் ஒன்றாகக் கொட்டி எண்ணத் தொடங்கினான். கோடிக் கணக்கான தங்க நாணயங்கள் தன்னிடம் இருப்பதை அறிந்தான். இவ்வளவு சேர்த்தும் மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை அவனை விட்டுப் போகவில்லை.