பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 பதினெண் புராணங்கள் எனவே அவன் சிந்திக்கலானான். இவ்வளவு பொருளைச் சேர்த்தும் தன்னுடைய ஆசை அடங்கவில்லை என்பதை அறிந்து கொண்ட அவன் இவ்வாறு பொருளைச் சேர்ப்பதால் தன் வாழ்வில் அமைதியைக் காணவோ இறை நாட்டம் கொள்ளவோ முடியாது என்பதை அறிந்து கொண்ட அவன் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தான். தன்னிடம் உள்ள பொருளை எல்லாம் நான்காகப் பங்கிட்டான். அதில் இரண்டு பங்கு எடுத்து இரண்டு பிள்ளைகளுக்குக் கொடுத்து விட்டு, மீதமிருந்த இரண்டு பங்கைத் தான் வைத்துக் கொண்டான். தான் வைத்துக் கொண்ட பொருளிலிருந்து விஷ்ணுவிற்குக் கோயில் கட்டுதல், குளம் வெட்டுதல், மரம் நடுதல், சாலைகள் போடுதல் என்பன போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டுத் தன் செல்வத்தைச் செலவழித்தான். ஏழைகளுக்கும் வேண்டுமான அளவு கொடுத்தான். தள் செல்வம் முழுவதும் தீர்ந்த பிறகு கங்கைக் கரையிலுள்ள வத்திரிகாசிரமத்திற்குச் சென்றான். அங்குள்ள முனிவர்கள் பலரோடு சேர்ந்து யோகம் பயிலத் தொடங்கினான். அங்குள்ள ஜனந்தி என்ற முனி. யோக மார்க்கத்தின் நுணுக்கங்களை அவனுக்குக் கர், தந்தார். இந்த யோகப் பயிற்சியின் மூலம் தேவமாலி மாயை யிலிருந்து விடுபட முடிந்தது. தேவமாலியின் பிள்ளைகள் தேவமாலியின் இரு பிள்ளைகளுக்கும் தன் :ெத்தில் சரிபாதியை இரண்டாகப் பிரித்துத் தந்திருந்தான் அல்லவா? மூத்தவனாகிய யக்ஞமாலி தன் ஒரு பங்கை வைத்துக் கொண்டு நல்ல முறையில் தான தருமம் செய்து புண்ணியத்தைத் தேடிக் கொண்டான். இளையவனாகிய சுமாலி பெருஞ் சொத்து கிடைத்தவுடன் தீயவர்களுடன் கூட்டுச் சேர்ந்து தகாத