பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாரத புராணம் 273 வழிகளில் தன் சொத்தைக் கரைத்தான். பணம் கையை விட்டுப் போனதும் சுற்றி இருந்த உறவினர்களும் நண்பர்களும் அவனைக் கைவிட்டுப் போயினர். இந்த நிலையில் யக்ஞமாலி அவனை அழைத்து, அவன் தகாத செயல்களை எடுத்துக் கூறி, அவன் நேர்வழிக்கு வரவேண்டும் என்று அறவுரை கூறி, தன்னிடம் மிச்சமிருந்த சொத்தில் ஒரு பகுதியைக் கொடுத்து, 'இதை வைத்துப் பிழைத்துக் கொள் என்று தம்பிக்குத் தந்தான். ஆனால் சுமாலி பழைய வாழ்க்கை முறையை விடாமல் இருந்ததால் இந்தச் சொத்தும் அழிந்தது. இப்பொழுது தமையனைக் கொன்றுவிட்டால் அவனது பெருஞ்சொத்து தனக்கே வரும் என்று நினைத்த சுமாலி, கத்தியை எடுத்துக் கொண்டு அண்ணனைக் கொல்ல நினைத்தான். அந்நிலையில் காவலர்கள் அவனைப் பிடித்துச் சென்று அரசனிடம் வாழ்ந்து வந்தான் தேவமாலி. நாட்டில் உள்ள யக்ஞமாலி நல்ல அறவழிகளில் தன் சொத்துக்களைச் செலவழித்து தானும் ஏழையானான். ஆனால் அவன் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அனைத்தும் போய்விட்ட நிலையில் ஒரு விஷ்ணு கோயிலுக்குச் சென்று அங்கேயே தங்கி தெய்வப் பணி செய்யலானான். விதியின் விளையாட்டால் சகோதரர்கள் இருவரும் ஒரே நாளில் இறந்தனர். விஷ்ணுவின் பணியாளர்கள் யக்ஞமாலியைப் பொன் விமானத்தில் ஏற்றினர். கீழே பார்த்த யக்ஞமாலிக்கு ஒர் ஆச்சரியம். கீழே அவனுடைய தம்பி சுமாலியை யமபடர்கள் கயிற்றால் கட்டி தடி, கம்பால் அடித்து யம லோகத்திற்கு இழுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து மனம் நொந்து, “என்னுடைய தம்பியை விஷ்ணு லோகத்திற்கு அழைத்துக் கொள்ள ஏதாவது வழி உண்டா?” என்று கேட்டான். அவர்கள், “நீ செய்திருக்கும் புண்ணியத்தில் 18م..في الملا