பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 பதினெண் புராணங்கள் ஒரு பகுதியை அவனுக்குத் தந்தால் அவனும் விஷ்ணு லோகத்திற்கு வர முடியும்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட யக்ஞமாலி மிக்க சந்தோஷத்துடன் தன் புண்ணியத்தில் ஒரு பகுதியைத் தம்பிக்குத் தந்தான். அண்ணனுடைய புண்ணியம் தனக்குக் கொடுக்கப்பட்டதால் சுமாலியும் விஷ்ணு லோகத்திற்கு வந்து அந்தப் புண்ணியம் தீரும் வரை இருந்து மறுபடியும் பூமியில் போய்ப் பிறந்து விட்டான். கணிக்கா விஷ்ணுவைக் கும்பிடாத வீடு சுடுகாடு போன்றது. விஷ்ணுவை வணங்காதவர்கள் உயிரோடு இருந்தும் நடமாடும் பிணமே ஆவார்கள். மக்களாகப் பிறந்தும் விஷ்ணுவை வணங்காதவர்கள் அரக்கர்களே ஆவார்கள். விஷ்ணு பக்தி தானாக வருவதில்லை. அந்த பக்தி செய்வதற்குக் கூடச் சிறிது புண்ணியம் செய்திருக்க வேண்டும். முழு மனத்தோடு இல்லாமல் ஒப்புக்கு செய்யப்படும் விஷ்ணு பக்தி கூடச் சிறிதளவு புண்ணியத்தைத் தரும். விஷ்ணு பக்தியினால் கிடைக்கும் சிறிதளவு புண்ணியம் கூட ஒருவன் செய்துள்ள பெரிய பாவத்தைப் போக்கும். சத்திய யுகத்தில் கணிக்கா என்னும் ஒரு வேடன் இருந்தான். பிறருக்குத் தீமை செய்வது, பிறர் பொருளைக் கொள்ளையடிப்பது, பிறரைக் கொல்வது போன்ற தீய செயல்களைச் செய்வதும், கோயில் சொத்தைத் திருடுவதும் அவனது வழக்கமாக இருந்தது. ஒருமுறை செளபிரா என்ற நகருக்குள் வேடன் வந்தான். அங்குள்ள விஷ்ணு கோயிலுக்குள் அவன் நுழைந்தான். தங்கத்தால் செய்யப்பட்ட பாத்திரங்கள் விஷ்ணுவின் எதிரே இருப்பதைக் கண்ட வேடன், அச்சொத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் என்று முடிவு செய்தான். இரவில் கோயிலைச்