பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 பதினெண் புராணங்கள் தோன்றினார். விரைவில் எல்லாவற்றிலிருந்தும் விடுதலை பெற்று மேலே செல்லக்கூடிய வரத்தை யுதங்கருக்கு அளித்தார். யக்ளுத்துவஜா யக்ளுத்துவஜா என்ற அரசன், தான் வாழ்ந்த காலத்தில் பல இடங்களில் விஷ்ணு கோயில் கட்டினான். ரேவா நதிக் கரையிலும் ஒரு கோயில் கட்டினான். அவன் கட்டிய எல்லாக் கோயில்களிலும், கோயிலைச் சுத்தம் செய்யும் பணியும், இரவில் விளக்கேற்றும் பணியும் ஒழுங்காக நடைபெற வேண்டும் என்பதற்காகப் பெருமுயற்சி செய்தான். தன்னுடைய குருவாக இருந்த விதஹோத்ரா என்பவன், “அரசே! விஷ்ணு கைங்கர்யம் என்பதைப் பல வழிகளில் செய்யலாம். அவற்றை எல்லாம் விட்டுவிட்டுக் கோயிலைத் துாய்மை செய்தல், விளக்கேற்றுதல் ஆகிய இரு காரியங்களுக்காக மட்டும் இவ்வளவு கவனம் செலுத்த வேண்டுமா? அது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை?” என்று கேட்டான். இதைக் கேட்ட யக்ஞத்துவஜா அந்த குருவை நோக்கிச் சொல்ல ஆரம்பித்தான். "குருவே! எனக்கு ஜதீஸ்மரா என்ற பழம்பிறப்பை உணரும் ஆற்றல் உண்டு. அதனால்தான் இவ்வாறு செய்கிறேன். சத்திய யுகத்தில் ரைவதா என்ற ஒரு பிராமணன் இருந்தான். எத்தனை குற்றங்கள் புரிய முடியுமோ அத்தனை யும் புரிந்தான். எந்தெந்தப் பொருள்களை பிராமணன் தொடக் கூடாதோ அவற்றையெல்லாம் வியாபாரப் பொருளாக்கி விற்றான். அவன் மனைவி பந்துமதி என்பவளும் பிராமணர்களுக்குரிய வாழ்க்கையை மேற்கொள்ளாமல், தன் கணவனைப் போலவே தவறான வழிகளில் காலத்தை ஒட்டினாள். அந்த பிராமணனுடைய வாழ்க்கை முறையைப்