பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 பதினெண் புராணங்கள் அந்த குரு இதைக் கேட்டு வியப்படைந்து, தானும் பெரிய விஷ்ணு பக்தனாகி விட்டான். இந்த உலகத்தில் பிறந்தவர்கள் அடையும் பெருந் துன்பங்களில் இருந்து விடுதலை பெற வேண்டுமானால், விஷ்ணு பக்தி ஒன்றுதான் அதனைச் செய்யும். நேரடியாக விஷ்ணுவுக்குத் தொண்டு செய்வதைப் போல விஷ்ணு பக்தர்களுக்குத் தொண்டு செய்வதும் பெரும் புண்ணியத்தைத் தரும். விஷ்ணுவையும் இலட்சுமியையும் வழிபடுபவர்கள், விஷ்ணு பக்தர்களை வழிபடுபவர்கள் இவர்களுடைய வீடுகளில் இலட்சுமி நிரந்தரமாக இருப்பாள். துளசிச் செடி வளர்ப்பதும், இத்தகைய பெரும் புண்ணியத்தைத் தரும். சாளக்கிரமம் வைத்து வழிபடுபவர்கள் வீட்டினுள் நிரந்தரமான செல்வம் கொழிக்கும். முடிவுரை நாரதர் உபதேசித்த இந்தப் புராணத்தை வேதவியாசரின் சீடரும், லோமஹர்ஷனரின் மகனுமாகிய சுதா முனிவர் இப்படிச் சொல்லி முடித்தார். மேலும் அவர் இப்புராணத்தின் ஒரு பாடலைப் படிப்பவர் சகல பாவங்களில் இருந்தும் விடுபடுவர் என்றும்; ஒர் அத்தியாயத்தைப் படிப்பவர் பல யாகங்களைச் செய்த புண்ணியத்தை அடைவர் என்றும்; நாரத புராணத்தை வீட்டில் வைத்திருந்தால் அவ்வீட்டில் பேய், பிசாசுகள் அண்டாது என்றும், அவ்வீட்டில் திருட்டு நடைபெறாது என்றும் சொல்லி முடித்தார். 国 口 口