பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 பதினெண் புராணங்கள் விழுகையில் இந்த நான்கு முட்டைகளையும் மூடி மறைத்துக் கொண்டது. பாரதப் போர் முடிந்து பல காலம் ஆன பிறகு, ஷமிகா என்ற முனிவர் அவ்விடத்தில் நடக்கையில் இந்தப் பெரிய மணிக்குள் பறவைகளின் சப்தத்தைக் கேட்டு மூடியிருந்த மணியை அகற்றினார். நான்கு குஞ்சுகள் உயிருடன் இருப்பதை அறிந்தார். அவற்றை எடுத்துக்கொண்டு தம் ஆசிரமம் சென்று எவ்வித ஆபத்தும் வராதபடி பாதுகாப்பான இடத்தில் வைத்து இக் குஞ்சுகளை வளர்த்தார். அவை பெரிய பறவைகள் ஆனதும், காட்டில் சுதந்திரமான பறவைகளாய்த் திரிந்தன. இருந்தாலும் இரவானதும் ஆசிரமத்தில் வந்து தங்கிவிட்டன. அப்படித் தங்கி இருக்கும் பொழுது அங்கு விவாதிக்கப்படும் வேதங்கள், சாத்திரங்கள் ஆகியவற்றை ஒரளவு புரிந்து கொண்டன. ஒருநாள் இந்தப் பறவைகள் நான்கும் ஷமிகா முனிவர் எதிரே சென்று மிக்க வணக்கத்துடன், “முனிவரே! நாங்கள் நால்வரும் இந்த உடம்புடன், உயிருடன் இருப்பது தங்கள் கருணையால்தான். அது மட்டுமல்ல; தாங்கள் எங்களுக்கு இங்கே இடம் தந்ததால்தான் வேத சாஸ்திர புராணங்களைப் பற்றியும் தெரிந்து கொண்டோம்” என்று கூறின. பறவைகள் பேசுவதைக் கண்டு வியப்பில் ஆழ்ந்து போன ஷமிகா முனிவர், "உண்மையில் நீங்கள் பறவைகள் அல்ல. நீங்கள் யார் என்பதை எனக்குச் சொல்ல வேண்டும்?” என்று கேட்டவுடன் அப் பறவைகள் ஒரு கதையைச் சொல்ல பறவைகளின் கதை நீண்ட காலத்திற்கு முன்னர் சுக்ரிஷா என்றொரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவருடைய பிள்ளைகளே இந்த நான்கு