பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 பதினெண் புராணங்கள் ஐவரையும் மணம் செய்து கொள்ள வேண்டும்? அதற்குப் பறவைகள் சொன்ன விடை கீழே தரப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் துவஷ்டா என்ற அசுரனின் மகன் திரிசரா என்பவன் தலைகீழாக நின்று கடுந்தவம் இயற்றிக் கொண்டிருந்தான். அவனுடைய தவம் நிறைவேறினால் தன் ஆட்சிக்கு ஆபத்து விளையும் என்பதை அறிந்த இந்திரன் மறைவாக நின்று தவத்தில் இருந்த திரிசராவைக் கொன்று விட்டான். திரிசரா பிராமணன் ஆகையினாலும், தவத்தில் இருந்தானாகையாலும் அவனைக் கொன்ற இந்திரனின் ஆற்றலில் ஒரு பகுதி தருமதேவதையிடம் சென்று விட்டது. திரிசரா கொல்லப்பட்டதை அறிந்த துவஷ்டா தன் தலையில் இருந்து ஒர் உரோமத்தை எடுத்து அக்னியில் போட, அதிலிருந்து சர்வ வல்லமை உள்ள விருத்ராசுரன் தோன்றினான். விருத்திரனைக் கண்டு அஞ்சிய இந்திரன், சப்த ரிஷிகளிடம் சென்று முறையிட்டு தனக்கும் விருத்திரனுக்கும் நட்புச்செய்து வைக்குமாறு வேண்டிக் கொண்டான். இருவரும் நண்பர்கள் ஆயினர். மனத்துக்குள் வஞ்சகத்தை நிரப்பி இருந்த இந்திரன், நம்பி இருந்த விருத்திராசுரனை வஞ்சகமாகக் கொன்றுவிட்டான். இந்தத் தவறான கொலையின் காரணமாக இந்திரன் தன் ஆற்றலின் ஒரு பகுதி வாயுவிடம் சென்று விட்டது. இந்திரன் ஆற்றலின் மற்றொரு பகுதி நேரே அருச்சுன னுக்குச் சென்றது. கெளதமன் என்று நம்பிய முனிபத்தினி யாகிய அகலிகையை ஏமாற்றியதால், இந்திரனிடம் மிஞ்சி இருந்த ஆற்றல் முழுவதும் இரண்டு அஸ்வினிகளிடம் சென்று விட்டது. இந்த நிலையில் பூமியில் அரக்கர்கள் மிகுதியாகத் தோன்றி விட்டமையால், பூமி தேவி சுமேரு மலைக்குச் சென்று தனது