பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்கண்டேய புராணம் 287 ஆற்றாமையை வெளியிட்டாள். தேவர்கள் அவளுக்கு பாரத்தைக் குறைப்பதாகக் கூறி தருமதேவதை இந்திரனிடம் பெற்ற ஆற்றலை யுதிஷ்டிரனாகவும், வாயு பெற்ற ஆற்றலை பீமனாகவும், இந்திரன் ஆற்றல் அருச்சுனனாகவும், அஸ்வினி களின் ஆற்றல் நகுல, சகாதேவர்களாகவும் பிறக்குமாறு செய்தார்கள். இந்திரன் மனைவியாகிய சச்சி திரெளபதி யாகவும் பூமியில் பிறந்து ஐவரையும் மணந்து கொண்டாள். யுதிஷ்டிரன் முதல், சகாதேவன் வரை உள்ள ஐவரும் மனிதர்கள் என்ற முறையில் வெவ்வேறானவர்களாக இருப்பினும், இந்திரனுடைய ஆற்றலின் ஒவ்வொரு கூறாகவே இருந்தனர். இந்த ஐவரும் இந்திரன் ஆற்றல்களே. ஆதலால் சச்சி அல்லது திரெளபதி ஐவரையும் மணந்ததாகச் சொன்னாலும், உண்மையில் இந்திரன் ஒருவனையே மணந்தாள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அரிச்சந்திரன் கதை முன்னொரு காலத்தில் திரேதாயுகத்தில் அரிச்சந்திரன் என்ற மன்னன் இந்த நில உலகை ஆண்டு வந்தான். அவன் ஆட்சிச் சிறப்பால் பஞ்சம், நோய், பிணி முதலிய எதுவும் ன் நாட்டில் ட்டவில் வேட்டைக்கச் சென்ற அவன், தப்பி ஓடிய சில மான்களைத் துரத்திக் கொண்டு காட்டில் வெகுதூரம் வந்து விட்டான். மானின் பின்னே ஒடிக்கொண்டிருந்த மன்னன் காதுகளில், “எங்களைக் காப்பாற்றுங்கள் என்ற பெண்களின் அபயக் குரல் விழுந்தது. உடனே, மானின் பின் போவதை விட்டுவிட்டு அபயக் குரல் வந்த திசைப் பக்கம் சென்றான். அங்கே ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருப்பதையும், அவர் எதிரே சில பெண்கள் 'காப்பாற்றுங்கள் என்று ஒலமிடுவதையும் கண்டான். வில்லில் அம்பைப் பூட்டிய மன்னன் எதிரே இருப்பவர் ஒரு முனிவர்