பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்கண்டேய புராணம் - 289 கூறியவுடன் அரிச்சந்திரன் மிக்க மகிழ்ச்சியோடு "எதைக் கேட்டாலும் தருகிறேன்” என்று கூறிவிட்டான். விசுவாமித்திரர், “நீ ஆளும் உலகம் முழுவதும் அதிலுள்ள பொருள்கள், ராஜ்ஜியத்தில் உள்ள தேர்கள், யானைகள், குதிரைகள், பொன் ஆபரணங்கள், வெள்ளி ஆபரணங்கள் ஆகிய அனைத்தும் எனக்கு வேண்டும். சுருங்கச் சொன்னால், நீ உன் மனைவி, உன் மகன் ஆகிய மூவர் தவிர உன் ராஜ்ஜியத்தில் உள்ள மக்கள் அனைவரும் என் உடைமை ஆகவேண்டும்” என்று கூறினார். அரிச்சந்திரன், "இப்பொழுதே தந்து விட்டேன்” என்று கூறினான். “என்னுடைய ராஜ்ஜிய எல்லைக்குள் நீ இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே இந்த எல்லைக்கப்பால் நீ உன் மனைவி, மகனுடன் சென்று விடுவாயாக!” என்றார் முனிவர். “முனிவர் உத்தரவுப்படியே இந்த நாட்டின் எல்லைக்கப்பால் செல்கிறேன்.” என்று புறப்பட்ட அரிச்சந்திரனைத் தடுத்து நிறுத்திய விசுவாமித்திரர், "நீ செய்த ராஜதுய யாகத்தில் எல்லா பிராமணர்களுக்கும் தட்சணை தந்தாய் அல்லவா? என்னுடைய பங்கை இப்பொழுது தரவேண்டும்” என்றார் முனிவர். அரிச்சந்திரன், “முனிவரே! என்னிடம் உள்ள அனைத்தையும் தந்துவிட்டேன். இப்பொழுது என்னைத் தவிர என்னுடையது என்று சொல்லக் கூடியது எதுவுமில்லை. நான் என்ன செய்ய முடியும்?” என்றான். அதைக் கேட்ட விசுவாமித்திரர், "நீ சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. என் தட்சிணையைத் தந்தே தீர வேண்டும்” என்றார். ஒரு விநாடி திகைத்து நின்றுவிட்ட அரிச்சந்திரன், “முனிவரே! ஒரு மாதம் அவகாசம் கொடுங்கள். நான் நிச்சயமாக வந்து உங்களுக்குரிய தட்சினை யைத் தந்து விடுகிறேன்” என்றான். அவன் வாய்மொழியை ஏற்றுக் கொண்டு, “சென்று வா” என்று அனுப்பிவிட்டார் விசுவாமித்திரர். цц.-19