பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 பதினெண் புராணங்கள் நாட்டின் எல்லையை விட்டுப் போய்க் கொண்டிருந்தான் அரிச்சந்திரன். அவன் மனைவி அரசியாகவே இருந்து பழகி விட்ட காரணத்தால், வேகமாக நடக்க முடியாமல் கொஞ்சம் மெல்லவே நடந்து சென்றாள். சினம் கொண்ட விசுவா மித்திரர் “சீக்கிரம் இவ்வெல்லையை விட்டுப் போ” என்று சொல்லிக் கொண்டே அரிச்சந்திரன் மனைவியாகிய ஷைவியாவை ஒரு தடி கொண்டு பலமுறை அடித்தான். அரிச்சந்திரன் இதுபற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல், "இதோ போய் விடுகிறோம், கோபம் வேண்டாம் முனிவரே என்று கூறினான். ஆனால் மேலே இருந்து இந்தக் கொடுமையைப் பார்த்துக் கொண்டிருந்த விஸ்வதேவர்கள் ஐவரும் மன வருத்தம் தாங்காமல், 'விஸ்வாமித்திரர் செய்வது வெட்கக் கேடு, வெட்கக் கேடு என்று கூறிவிட்டனர். அந்தச் சொற்கள் காதில் விழுந்ததும், விஸ்வாமித்திரர் கோபம் கொண்டு விஸ்வதேவர்கள் ஐவரையும் மானிடராகப் பிறக்கக் கடவது' என்று சாபமிட்டார். கலங்கிப் போன ஐவரும் வந்து முனிவரிடம் மன்னிப்புக் கேட்க முனிவர் மனமிரங்கி, "மானிடராகப் பிறந்தாலும் உங்கட்கு மனைவி, குழந்தைகள் என்ற பந்தமிராது. சாதாரண மனிதர்களை ஆட்டிப் படைக்கும் எந்தத் துன்பமும் உங்கள் ஐவரையும் பாதிக்காது” என்றார். சாபம் பெற்ற ஐந்து விஸ்வதேவர்களே, பாண்டவர்களின் புதல்வர்களாக- இளம் பஞ்சபாண்டவர்கள் என்ற பெயரில் திரெளபதிக்குப் பிறந்தனர். பறவையிடம் அரிச்சந்திரன் கதையை அறிய ஆவலாக இருக்கிறேன் என்று ஜெய்மினி முனிவர் கூறியவுடன், பறவைகள் சொல்ல ஆரம்பித்தன. "நாட்டின் எல்லைக்கு வந்த அரிச்சந்திரன் எங்கே போவது என்று தெரியாமல் தவித்தான். எங்கே சென்றாலும் அது விசுவாமித்திரருக்கு தானம் செய்த