பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்கண்டேய புராணம் 291 பகுதியாகவே இருந்தது. இந்த நிலையில் வாரணாசி அவன் நினைவுக்கு வந்தது. அந்த ஊர் எந்த அரசனுக்கும் சொந்த மில்லை. சிவனுக்குரிய ஊர். எனவே மனைவியையும் குழந்தை யையும் அழைத்துக் கொண்டு வாரணாசிக்குள் புக முற்பட்டான். விசுவாமித்திரர் தடுத்து நிறுத்தினார். “அரிச்சந்திரா! நீ சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை. ஒரு மாதம் தவணை கேட்டாய். நேற்றோடு இருபத்து ஒன்பது நாட்கள் முடிந்துவிட்டன. இந்த ஒரு நாளில் என்ன செய்யப் போகிறாய்?" என்றான். “முனிவரே! இன்றைய பொழுதுக்குள் உங்களுக்குத் தர வேண்டியதைத் தந்து விடுகிறேன்” என்று கூறிவிட்டு நகருக்குள்ளே வந்து கலங்கிப் போய் நின்றான். அவன் மனைவி ஷைவ்வியா, “அன்பரே! கலங்க வேண்டாம். என்னை விற்றுக் கடனை அடையுங்கள்” என்றாள். மயங்கி விழுந்த அரிச்சந்திரன் மூர்ச்சை தெளிந்து எழுந்ததும், வேறு வழியின்மையால் மனைவியை விற்கக் கூவ ஆரம்பித்தான். கொடுமையான கிழட்டுப் பிராமணன் ஒருவன் ஷைவ்வியா வையும், அவன் மகன் ரோஹித்தையும் விலை கொடுத்து வாங்கி, இருவரையும் கட்டி இழுத்துக் கொண்டு போனான். கண்ணிர் ததும்பக் கலங்கி நின்ற அரிச்சந்திரனிடம் விசுவா மித்திரர் வந்து பணம் கேட்டார். விற்ற பணத்தை விசுவா மித்திரரிடம் கொடுக்க, விசுவாமித்திரர் கோபம் பொங்க, “அரிச்சந்திரா! என்ன நினைத்து விட்டாய்? இந்தத் தொகையையா என் போன்ற ஒரு முனிவனுக்கு தட்சினை யாகக் கொடுப்பது? இதை விசிறி அடித்து விடுவேன். இன்னும் நேரமிருக்கிறது. அதற்குள் எனக்குரிய தொகையைத் தர வேண்டும்” என்றார். இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க தரும ஒரு சண்டாள வடிவம் கொண்டு வந்தது. தன்னையே விற்கத் துணிந்த அரிச்சந்திரனிடம் பேசி வாங்க முயன்றான்