பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/322

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மார்க்கண்டேய புராணம் 293 விடத் துணிந்தனர். அப்பொழுது இந்திரன், விசுவாமித்திரர் ஆகிய அனைவரும் ஒன்று சேர்ந்து அவனைத் தடுத்து அவன் மனைவி மக்களோடு இந்த உடம்போடு சொர்க்கம் போகலாம் என்று கூறி, ரோஹித்வஷாவின்மேல் அமிர்தம் தெளித்து உயிர் கொடுத்தார். அது கேட்ட அரிச்சந்திரன், “அரசனாக இருந்த நான், என் கீழ் வாழும் மக்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்வதுதான் முறை. சந்தர்ப்பம் கிடைத்தது என்பதற்காக நான் மட்டும் மோட்சம் போகத் தயாரில்லை!” என்று அவன் கூறியவுடன், இந்திரன் அவனைப் பார்த்து, “அரிச்சந்திரா! நீ கூறுவது சரியில்லை. ஒவ்வொருவர் செய்த பாவ புண்ணியங் களுக்கு ஏற்ப ஒருவர் சொர்க்கம் செல்ல முடிகிறது. எல்லா மக்களும் ஒரே அளவாகப் பாவ புண்ணியங்களைச் செய்ய வில்லை. ஆகவே, நீ நினைப்பது போல நடைபெறுவது கடினம்’ என்று கூறினார். உடனே அரிச்சந்திரன் தான் சேகரித்திருந்த புண்ணியத்தின் பெரும் பகுதியைத் தன் குடிமக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து விட்டு, மகன் ரோஹித்வஷாவை அரசனாக்கினான். வந்த விமானத்தில் தான் தன் மனைவியோடு சொர்க்கம் சென்றான். வசிட்டரும் விஸ்வாமித்திரரும் அரிச்சந்திரனுக்கும், அவனுடைய பரம்பரையினருக்கும் குல குருவாக இருந்தவர் வசிட்டர் ஆவார். விஸ்வாமித்திரர், அரிச்சந்திரனுக்கு இவ்வளவு தொல்லைகள் தந்த பொழுது, குல குருவாகிய வசிட்டர் அரிச்சந்திரனுடன் இல்லை. நீருக்கடியில் நின்று பன்னிரண்டு ஆண்டுகள் தவம் செய்யப் போய்விட்டார். அந்த இடைக் காலத்தில்தான் அரிச்சந்திரனுக்கு இந்தச் சோதனைகள் ஏற்பட்டன. அனைத்தும் முடிந்து, அரிச்சந்திரன் சொர்க்கம் வந்த பிறகு தவத்தில் இருந்து மீண்ட வசிட்டர், நடந்தவற்றைக் கேள்விப்பட்டார். கடுஞ்சினம்