பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 பதினெண் புராணங்கள் மாண்டவி முனிவரை வென்றவள் பிரதிஷ்தானா என்ற நகரத்தில் ஒரு பிராமணன் வசித்து வந்தான். அவன் தொழுநோயாளியாக இருந்த போதிலும், அவன் மனைவி அவனுடைய நோய்க்கு மருந்திட்டு அவனைக் காப்பாற்றி வந்தாள். சிடுமூஞ்சியாகிய அந்த பிராமணன் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டும், கற்பு நிலை வழுவாது அவன் மனைவி அவன்பால் எல்லையற்ற அன்புடையவளாய் நடந்து கொண்டாள். ஒருமுறை மேகங்கள் சூழ்ந்து ஒரே இருட்டாக இருக்கின்ற நேரத்தில், பிராமணன் வெளியே செல்ல வேண்டுமென்று சொன்னான். அவன் மனைவி இருட்டைப் பொருட்படுத்தாமல் அவனைத் தோளில் சுமந்து கொண்டு உலாவுவதற்குப் புறப்பட்டாள். நன்கு வழி தெரியாமையாலும், எதிரே இருப்பவர்கள் யார் என்று அறிய முடியாத இருட்டு ஆகையாலும் நோயாளியைத் தூக்கிச் சென்ற பொழுது, அந்த நோயாளியின் கை மற்றொருவர்மேல் பட்டு அவருடைய தவத்தைக் கலைத்து விட்டது. தவம் கலைந்த மாண்டவி முனிவர், “யாருடைய எந்த உறுப்புப் பட்டு என் தவம் கலைந்ததோ, அந்த உறுப்பை உடையவன் சூரிய உதயமானவுடன் இறந்து விடுவான்” என்று சாபம் கொடுத்தார். இந்தச் சாபத்தைக் காதில் வாங்கிக் கொண்ட பிராமணன் மனைவி கண் தெரியாத இருட்டில் எதிர்பாராமல் நடந்துவிட்ட இந்த மிகச்சிறிய குற்றத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று மனம் பதறிப் போன அவள், சூரிய உதயமே ஆகாமல் போகட்டும்” என்று எதிர் சாபமிட்டாள். கற்புடைய பெண்ணின் சாபம் பலித்தது. பத்து நாட்களாகச் சூரியன் வெளிவரவில்லை. தேவர்கள், பிரம்மனிடம் சென்று முறையிட்டார்கள். பிரம்மன் உடனே காரணத்தை அறிந்து கொண்டார். “ஒரு கற்புக்கரசியின் சாபத்தால் இந்நிலை வந்தது. இதில் நாம் தலையிட்டு ஒன்றும் செய்ய முடியாது. மற்றொரு