பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/328

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மார்க்கண்டேய புராணம் 299 உண்டு. இலக்குமி ஒருவருடைய கால் பக்கம் இருக்கும் போது, அவனுக்கு வீடு, மனை முதலிய வசதிகள் இருக்கும் இலக்குமி ஒருவனுடைய தொடைப் பக்கம் இருக்கும்போது அவனுக்குக் குழந்தைகள் பிறக்கும் இலக்குமி ஒருவனுடைய இதயத்தில் இருக்கும் போது அவன் எல்லா ஞானமும் பெறுவான்; இலக்குமி ஒருவனுடைய தலைப் பக்கம் இருந்தால் அவள் அவர்களை விட்டுப் போகப் போகிறாள் என்று அர்த்தம். இப்பொழுது அசுரர்கள் இலக்குமியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டதால் அவள் அவர்களை விட்டுப் போய் விட, அசுரர்கள் போரில் மடிந்தனர். கார்கா சொன்னதைக் கேட்ட அருச்சுனன் தத்தாத்ரேயரிடம் சென்று அவரை வழிபட்டு, பல வரங்களைப் பெற்றான். ஒன்று, ஆயிரம் கைகளை உடையவனாக இருப்பது இரண்டு, ஈடு இணையற்ற உலகத்தின் தலைசிறந்த வீரனாலேயே தான் கொல்லப்பட வேண்டுமென்பது எல்லா இடங்கட்கும் செல்லக் கூடிய ஆற்றலைப் பெறுவது; பகைவர்கள் இருக்குமிடத்தை மானசீகமாகக் கண்டு அறிவது. இந்த வரங்களைப் பெற்றுக் கொண்ட அருச்சுனனுடைய முடிசூட்டு விழா மூன்று உலகத்திலும் உள்ள பெரியோர் களெல்லாம் வந்து காணுமாறு நடைபெற்றது. அவன் ஹைஹய நாட்டின் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். அலார்க்கா முன்னொரு காலத்தில் மிக்க பலம் வாய்ந்த சத்ருஜித் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு ரிதத்துவஜா என்ற மகன் இருந்தான். அரசகுமாரனாகிய அவன் பலத்தில் இந்திரனையும், அழகில் அஸ்வினிகளையும், அறிவுக் கூர்மையில் பிருஹஸ்பதியையும் ஒத்து இருந்தான். நற்பண்புகளுக்கெல்லாம் உறைவிடமான அவனுக்கு பிராமண,