பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பதினெண் புராணங்கள் உரோமஹர்ஷனரைப் பார்த்தவுடன் இந்த வேள்விக்கு வந்த முனிவர்கள் பலரும் அவரைச் சூழ்ந்துகொண்டு, வேதவியாசரிடம் கற்ற புராணங்களைப் பற்றித் தங்களுக்குச் சொல்லுமாறு வேண்டிக் கொண்டனர். இந்த வேள்வி 12 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றமையால், உரோம ஹர்ஷனர் விரிவான முறையில் ஒவ்வொரு புராணம் பற்றியும் முனிவர்களுக்கு சொல்லத் தொடங்கினார். அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்கிய உரோம ஹர்ஷனர் மிகப் பழைய காலத்தில் தட்சன் முதலிய முனிவர்கள் நான்முகனைப் (பிரம்மன்) பார்த்து பூமியின் தோற்றம் பற்றிய வரலாற்றைத் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். நான்முகன் அளித்த விடையை அப்படியே வாங்கிக் கொண்ட என் குருவான வேதவியாசர் அவற்றை எனக்கு வழங்கினார். நான் கேட்டவற்றை இப்பொழுது உங்களுக்குச் சொல்லப் போகிறேன். தொடக்கத்தில் எங்கும் நீரே நிறைந்திருந்தது. பரப் பிரம்மத்தின் ஒரு வடிவாகிய விஷ்ணு அக்கடலின் மேல் படுத்திருந்தார். தண்ணிருக்கு (வடமொழியில்) 'நார' என்றொரு பெயருண்டு. அயன் என்ற சொல்லுக்கு படுக்கை என்பது பொருளாகும். எனவே நீரின் மேல் உறங்கிய பரப்பிரம்ம சொரூபம் நார + அயன = நாராயண என்ற பெயரைப் பெற்றது. இத்தண்ணீரிலிருந்து பொன்னாலான பெரிய முட்டை நீரின் வெளியே வந்தது. அதனுள் பிரம்மன் (நான்முகன்) இருந்தான். ஒராண்டுக் காலம் முட்டையினுள்ளே தங்கியிருந்த பிரம்மன் தன்னைத் தானே தோற்றுவித்துக் கொண்ட சுயம்பு மூர்த்தி ஆவான். ஒராண்டு முடிந்ததும் இந்த முட்டையை இரண்டாகப் பிளந்து கொண்டு பிரம்மன் வெளியே வந்தான். முட்டையின் ஒரு பகுதி பரந்த ஆகாய மாகவும், மற்றொரு பகுதி இவ்விரிந்த பூமியாகவும்