பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/330

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மார்க்கண்டேய புராணம் 301 கொண்டு வந்தேன்’ என்று கூறினான் பிராமணன். இதைக் கேட்டு மகிழ்ந்த சத்ருஜித் தன் மகனை அழைத்து, அக் குதிரையை அவனுக்குப் பரிசளித்து, இந்த பிராமணனுக்கு இடையூறு செய்யும் தைத்திரியர்களை அழித்து வருவாயாக என்றான். ரிதத்துவஜா அந்த மாயக் குதிரையில் ஏறிக் கொண்டு அந்த பிராமணர் ஆசிரமத்தை அடைந்தான். தைத்திரியர்கள் பன்றி, புலி, சிங்கம் ஆகிய வடிவங்களில் ஆசிரமத்திற்குப் பக்கத்தில் வந்தனர். அனைவரையும் வீழ்த்திய அரசகுமாரன் ஒரே ஒரு பன்றி மட்டும் தப்பி ஒடுவதை அறிந்து, அதைத் துரத்திச் சென்றான். கடைசியாக அந்தப் பன்றி ஒரு பிலத்திற்குள் நுழைந்தது. அதனுள் சென்ற அரசகுமாரன் இருட்டாக இருந்த பகுதியைக் கடந்து புதிய உலகத்திற்கே வந்து விட்டான். அனைத்தும் பொன்னால் ஆன அரண்மனையில், யாரும் நடம்ாட்டமே இல்லாதிருப்பதைக் கண்டான். ஆனாலும் அழகே வடிவான ஒரு பெண் ஒரிடத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவளை யாரென்று கேட்க மதலசா என்ற அப்பெண், தான் விஷ்வவக என்ற கந்தர்வனின் மகள் என்றும், பாதாள கேது என்ற அசுரன் தன்னை இங்கே வைத்திருப்ப தாகவும், தன்னைத் திருமணம் செய்து கொள்ள அவள் ஏற்பாடு செய்வதாகவும் கூறினாள். ரிதத்துவஜா அவளை மணக்க விரும்பினான். மணம் செய்து வைக்கும் ஆச்சாரியன் இல்லை ஆதலால், அப்பெண் தன் குருவான தும்புருவை வேண்டினாள். உடனே அவர் அங்குத் தோன்றி, இருவருக்கும் மணம் செய்வித்தார். மணமக்கள் அந்த இடத்தை விட்டுப் புறப்பட நினைக்கையில், பாதாள கேதுவும் அவன் துணைவர் களும் படையெடுத்து வந்து அரசகுமாரனைக் கொல்ல நினைத்தனர். துவஸ்திரா என்ற அஸ்திரத்தைப் பயன்படுத்தி தைத்திரியர்கள் அனைவரையும் அழித்தான். பிறகு அப் பெண்ணோடு தந்தையை வந்து வணங்கினான். அரசகுமாரன்