பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 பதினெண் புராணங்கள் சாகசச் செயல்களைச் செய்ய உதவியாக இருந்தது அந்த பிராமணன் கொடுத்த குதிரை. அக்குதிரையின் பெயர் 'குவலயா என்பதாகும். அக் குதிரையை ஒட்டும் அரசகுமாரன் 'குவலயஷ்வா என்று பெயர் பெற்றான். சில நாட்கள் கழித்து மன்னன் சத்ரஜித் தன் மகனை அழைத்து, "மகனே! நீ பகலில் ஒரு பகுதியில் உலகத்தைச் சுற்றி வந்து தவசிகளுக்குத் துன்பம் தரும் தானவர்களையும் தைத்திரியர்களையும் அழைத்து வருவாயாக!” என்று கட்டளை இட்டான். அன்று முதல் அரசகுமாரன் மதியம் வரை உலகைச் சுற்றி வந்து மாலைப் பொழுதில் தன் மனைவியாகிய மதலசாவுடன் பொழுதைக் கழித்து வந்தான். ஒருமுறை அவன் ஒரு போலி முனிவனைச் சந்திக்க நேர்ந்தது. அந்தப் போலி முனிவன், அரசகுமாரனால் கொல்லப்பட்ட பாதாள கேதுவின் தம்பியாகிய தாலகேது. அவன் முனிவன் வேடத்தில் இருந்ததால், அரசகுமாரன் அவனை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. ஆனால் தாலகேது அரசகுமாரனை அடையாளம் கண்டு கொண்டு பழிவாங்க முடிவு செய்தான். போலி முனிவர், “அரசே! நான் ஒரு பெரிய யாகம் செய்ய வேண்டும். அதற்குப் பொருள் இல்லை. தங்கள் கழுத்தில் இருக்கும் மணிமாலையைத் தந்தால் அதை வைத்து யாகம் செய்ய முடியும்” என்றார். அவன் வஞ்சனையை அறியாத அரசகுமாரன், மாலையைக் கழற்றிக் கொடுத்தான். பெற்றுக் கொண்ட போலித் துறவி, “நான் குளித்து விட்டு வரும் வரை இங்கேயே இரு” என்று சொல்லிவிட்டுப் போனான். குளிக்கச் செல்லாமல் சத்ரஜித் மன்னனிடம் அரசகுமாரனின் மாலையைக் காட்டி அவன் இறந்து விட்டதாக ஒரு கதையைக் கட்டி விட்டான். இதைக் கேட்டவுடன் அரசகுமாரன் மனைவி மதலசா உடனே உயிர் விட்டாள். திரும்பி வந்த போலிச் சாமியார் அரசகுமாரனைப் பார்த்து, மிக்க நன்றி. நீ