பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்கண்டேய புராணம் 305 சிலகாலம் கழித்து, சத்ரஜித் காலமாகி விடவே, ரிதத்துவஜா அரசனாகி விட்டான். அரசனான பிறகு குவலயஷ்வா என்று அழைக்கப்படும் ரிதத்துவஜாவிற்கும், அவன் மனைவி மதலசாவிற்கும் ஒருவர் பின் ஒருவராக, விக்ரந்தா, சத்ருமத்தனா, சுவாகு என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தனர். சிவனுடைய அருளால் மறுபிறவி பெற்ற மதலசா பெரிய ஞானியாக ஆகிவிட்டாள். எனவே இந்த மூன்று மைந்தர்கட்கும் ஆத்மாவின் இலக்கணத்தையும், உலகப் பொருள்களையும், மாயை, நிலையாமை ஆகியவற்றையும் நன்கு சொல்லிக் கொடுத்தாள். அதன் பயனாக அரசகுமாரர்களாகப் பிறந்த இந்த மூவரும் உலக விவகாரங்களில் எவ்வித ஈடுபாடும் இல்லாமல் ஆன்ம விசாரணையில் இறங்கி விட்டனர். இதனை அடுத்து நான்காவது பிள்ளை பிறந்தது. அலார்க்கா என்று பெயரிட்ட பொழுது, மன்னன் குவலயஷ்வா மனைவியைப் பார்த்து ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டிய சத்ரியன் அறிய வேண்டியவற்றை இவனுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும் எனறான. அவன் மனைவி அதை எதிர்த்து, இவை அனைத்துமே மாயை. அரசன் என்று ஒருவனுமில்லை. அவனுக்குப் பகை என்று ஒன்றுமில்லை. ஒர் ஆத்மாவிற்கு நண்பன் என்றோ, பகைவன் என்றோ யாருமில்லை. எனவே போர் புரிய வேண்டும் என்ற அவசியமில்லை என்று கூறினாள். அலார்க்காவின் துறவு ரிதத்துவஜாவின் நான்காவது பிள்ளையாகிய அலார்க்கா, சத்திரியர்களுக்குரிய கல்வி கற்று அரசை ஏற்றுக்கொண்டான் அவன் தாய் மதலசா காட்டுக்குப் போகும்போது மகனிடம் ஒரு மோதிரத்தைத் தந்தாள். 'மகனே! இதற்குள் ஒரு கடிதம் இருக்கிறது. எப்பொழுதாவது உனக்குப் பெரும் துன்பம் வந்து ш ц.--20