பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3í0 பதினெண் புராணங்கள் கந்தர்வன் இப்போது அவள் மனநிலை அறிந்து, அவள் விரும்பிய பிராமண இளைஞனின் வேடம் கொண்டு அவளிடம் வந்தான். உண்மை அறியாத வருதினி அவனை மணந்து கொண்டாள். அவர்களுக்கு ஒரு பிள்ளையும் பிறந்தது. உடனே அக்கலி அவளைவிட்டுப் போய்விட்டான். வருதினியின் மகன் ஸ்வரோச்சா வளர்ந்து பெரியவனாகி சாத்திரங்களை எல்லாம் கற்றுத் தேர்ந்து அழகுள்ள இளைஞனாக இருந்தான். ஸ்வரோச்சா ஒருமுறை மந்தார மலைக்குச் சென்ற பொழுது ஒர் இளம்பெண் என்னைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லி அவன் எதிரே வந்தாள். “ஏன் ஓடி வருகிறாய்? உனக்கு என்ன தீங்கு ஏற்பட்டது?" என்று ஸ்வரோச்சா கேட்ட உடன், அப்பெண் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள். "ஐயா! மனோரமா என்ற நானும், விபவரி, கலாவதி என்ற என் தோழிகளுடன் கைலாசத்தில் சுற்றிப் பார்த்துக் கொண் டிருந்தோம். முனிவர் ஒருவர் பெருந்தவத்தில் ஈடுபட்டிருந்த தால், அவருடைய உடம்பு இளைத்து, கண்கள் குழி விழுந்து பார்ப்பதற்கு பயங்கரமான தோற்றத்துடன் இருந்தார். அவரைப் பார்த்து நான் ஆணவத்தால் கேலி செய்துவிட்டேன். 'ஒரு ராட்சசன் வந்து என்னைப் பிடித்துக் கொள்வான்' என்று சாபமிட்டார். இவ்வளவு கொடிய சாபம் தருவது ஒரு முனிவருக்கு அழகல்ல' என்று என் தோழிகள் சொன்னவுடன், அவர் மேலும் கோபம் கொண்டு, ஒருத்திக்குக் குஷ்ட ரோகமும், இன்னொருத்திக்கு கூடியரோகமும் பீடிக்கட்டும்’ என்று சாபமிட்டார். "இது நடந்து மூன்று நாட்களாயின. இப்போது ஒரு கொடிய ராட்சசன் என்னைப் பின்தொடர்ந்து வருகிறான். என் கையில் ஒர் அற்புதமான ஆயுதம் இருக்கிறது. இந்த