பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம புராணம் மாற்றப்படலாயிற்று. இந்த பிரம்மம் எண்ணத்தின் மூலமாகவே இச்சா மாத்திரையாக) ஏழு ரிஷிகளை உண்டாக்கின. அவர்கள் முறையே மாரீச்சி, அத்ரி, ஆங்கீரசா, புலஸ்தியா, புலஹா, கிரது, வசிட்டன் ஆகிய எழுவரும் ஆவர். பிரம்மன் இவர்களோடு நில்லாமல் ருத்ரன் என்ற கடவுளையும், சனத்குமாரன் என்ற முனிவரையும் படைத்தான். இவர்களோடு இல்லாமல் பிரம்மன் தன் உடம்பில் இருந்து ஒர் ஆணையும், ஒரு பெண்ணையும் படைத்தான். இந்த ஆண் சுவயம்புமனு என்றும், பெண் ஷத்தரூபா என்றும் பெயர் பெற்றனர். அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு தங்கள் குலத்தைப் பெருக்கினர். மனுவின் பரம்பரையில் வந்ததால் மக்கள் 'மானவர்கள்’ என்று அழைக்கப்பட்டார்கள். மனுவுக்கும், ஷத்தரூபாவுக்கும் விரா, பிரியவிரதா, உத்தான பாதா என்ற மூன்று புத்திரர்கள் தோன்றினர். இவருள் உத்தானபாதரின் மகன்தான் பிரசித்தி பெற்ற துருவன். தேவ வருஷங்கள் மூவாயிரம் வரை துருவன் செய்த தவத்தைக் கண்டு மெச்சிய பிரம்மன் துருவனுக்குக் காட்சி தந்து, துருவ நட்சத்திரமாக அவன் விளங்குமாறு வரம் தந்தான். வடக்கே காணப்படும் சப்தரிஷி மண்டலத்தின் அடிப்பகுதியில் காணப்படுவது துருவ நட்சத்திரம் ஆகும். மூன்றாவது தலைமுறையாக பிரசேதாஸ் என்ற பெயருடன் பதின்மர் தோன்றினர். உலகை ஆளப் பிறந்த இவர்கள் ஆட்சி பீடத்தில் அமராமல் தவம் செய்யும் நோக்கத்துடன் கடலுக்கடியில் சென்று பதினாயிரம் ஆண்டுகள் தவம் புரிந்தனர். இதன் காரணமாக உலகை ஆள்பவர் இன்மையால் உலகம் முழுவதும் மரங்களும், செடிகளும் மண்டி அடர்ந்து வளர்ந்து விட்டன. இவற்றின் நெருக்கம் காரணமாகக் காற்றும் உள்ளே நுழைய முடியவில்லை. உலகம் தாங்கொணாத துன்பத்தை அனுபவிக்கத் தொடங்கியது. இந்தச் செய்தி கடலுக்கடியில்