பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்கண்டேய புராணம் 311 ஆயுதம் ருத்ரனால், சுவயம்பு மனுவிற்குத் தர, சுவயம்புமனு அதை வசிட்டருக்குத் தர வசிட்டர் அதை என் தாத்தாவிற்குத் தர, என் தாத்தா எனக்கு அதைத் தந்துள்ளார். எப்படிப் பட்டவரையும் அழிக்கக்கூடிய இந்த ஆயுதத்தை எப்படி வைத்திருப்பது, எப்படிப் பிரயோகிப்பது, எப்படி மீட்டுக் கொள்வது என்பதை நான் உங்களுக்குச் சொல்லித் தருகிறேன்” என்று கூறிவிட்டு, அந்த வித்தையினை அவனுக்குக் கற்றுத் தந்தாள். ஸ்வரோச்சா ஆயுதத்தை வாங்கிக் கொண்டதும் அரக்கன் அப்பெண்ணைப் பிடிக்க வந்தான். முனிவருடைய சாபப்படி பெண்ணைப் பிடிக்கட்டும். பிறகு மீட்டு விடலாம் என்ற நினைவில் ஸ்வரோச்சா சும்மா இருந்தான். அரக்கன் அப்பெண்ணைப் பிடித்துக் கொண்ட வுடன், இவன் ஆயுதத்தைக் கையில் எடுத்தான். அப்போது அந்த அரக்கன், ‘என் கதையைக் கேள்' என்று தன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினான். அரக்கனின் கதை “இளைஞனே! என் சொல்லைக் கேட்டு என்னைக் கொன்று விடாமல் விட்டாயே, உனக்கு என் நன்றி. இப் பெண் என்னுடைய மகள்தான். இவளுடைய தந்தையாகிய எனக்கு இந்திவரா என்று பெயர். ஆயுர்வேதத்தில் மிக வல்லவராகிய பிரமமித்ராவிடம் சென்று அவ்வித்தையைக் கற்றுக் கொடுக்குமாறு கேட்டேன். அவர் மறுத்து விட்டார். எனவே அவருக்குத் தெரியாமல் ரகசியமாக மற்ற மாணவர் களுக்குப் பாடஞ்சொல்லும் பொழுது ஒட்டுக் கேட்டேன். இக்கலையை நன்கு தெரிந்து கொண்டேன். நான் இக்கலையில் வல்லவனாகிய செய்தி எப்படியோ பிரமமித்திரருக்குத் தெரிந்து விட்டது. அரக்கனாகப் போகுமாறு சபித்து விட்டார். அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டேன். மனமிரங்கிய