பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/343

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


314 பதினெண் புராணங்கள் சபையில் உத்தமனும் வகுளாவும் அமர்ந்திருக்கும் பொழுது திராட்சைரசம் அருந்திக் கொண்டிருந்த உத்தமன் அதில் கொஞ்சம் வகுளாவிற்கும் தந்தான். ஆனால் வகுளா அந்த உபசரிப்பை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டாள். பலர் முன்னிலையில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக நினைத்துச் சினம் கொண்ட உத்தமன், காவலர்களை அழைத்து வகுளாவைக் காட்டில் விட்டுவரச் செய்து விட்டான். வேறு மணம் செய்து கொள்ளாமல், ஆட்சி நடத்தி வந்தான். ஒரு நாள், அரச சபையில் ஒரு பிராமணன் வந்தான். “அரசே! என்னுடைய மனைவியை யாரோ கவர்ந்து சென்று விட்டார்கள். அவளை எப்படியாவது மீட்டு வரவேண்டும்” என்றான். "ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ள நாட்டில் உன் மனைவியை எங்கே தேடுவது? அது முடியாத காரியம்” என்றான் அரசன். அதைக்கேட்ட பிராமணன், “அரசே! எங்கள் வருமானத்தில் ஆறில் ஒரு பங்கு உனக்கு வரியாகச் செலுத்து கிறோம். எதற்காக அதைச் செலுத்துகிறோம்? எங்களைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு” என்றான். இதைக் கேட்ட அரசன் வேறு வழியில்லாமல் "உன் மனைவியின் அடையாளத்தைச் சொல்!” என்றான். பிராமணர், “அவள் ஒல்லியாக அழகே இல்லாத முகத்துடன், அவலட்சணமாக இருப்பாள்” என்றான். அரசன், "இப்படிப்பட்ட ஒரு மனைவி போய்விட்டதற்காக நீ ஏன் வருந்த வேண்டும்?” என்று கேட்டான். பிராமணன் அதற்கு “அவள் எப்படி இருந்தாலும் என்னுடைய மனைவி, அவளைக் காப்பாற்ற வேண்டியது என் கடமை" என்றான். வேறு வழியில்லாமல் உத்தமன் ரதத்தில் ஏறிப் புறப்பட்டான். எங்கெல்லாம் தேடியும் கிடைக்காமையால் காட்டில் இருந்த ஒரு முனிவரிடம் சென்றான். அரசனை வரவேற்ற முனிவர் தன் சிஷ்யனைப் பார்த்து, உபசரிக்கின்ற பொருட்களைக் கொண்டு வா! என்றார். சிஷ்யன் அரசன்