பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/345

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


316 பதினெண் புராணங்கள் உறிஞ்சிவிட்டேன். இவளைக் கொண்டு வந்ததற்கு முக்கிய காரணம் உண்டு. இவள் கணவன் ராட்சசர்களை ஒழிப்பதற்கும், துன்புறுத்துவதற்கும் நிறைய யாகங்கள் செய்கிறான். இந்த யாகங்களில் முக்கியமானது என்ன வென்றால், ஒருவன் மனைவியோடு இருந்துதான் யாகம் செய்ய வேண்டும். இவளைத் தூக்கி வந்துவிட்டபடியால், பிராமணன் இனி யாகம் செய்ய முடியாது. இப்போது அவளை உன்னுடன் அனுப்புவதில் தடையில்லை” என்று கூறி அனுப்பிவிட்டான். பிராமணன் கூறியதும், முனிவர் கூறியதும் உத்தமன் மனத்தை வாட்டிக் கொண்டிருந்தது. இறுதியாக உத்தமன் அந்த முனிவரிடம் சென்று “என் மனைவி எங்கிருக்கிறாள்” என்று கேட்டான். முனிவர், “அவள் காட்டில் திரிந்து கொண்டிருக்கும் பொழுது கபோதகா என்ற நாக அரசன் அவளை எடுத்துச் சென்று மணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் வைத்திருந் தான். ஆனால் கபோதகனுக்கு ஏற்கெனவே மனோரமா என்ற மனைவியும், நந்தா என்ற மகளும் இருந்தனர். நந்தா என்ற அந்தப் பெண் தன் தாயை விட்டு விட்டுத் தன் தகப்பன் வேறொரு பெண்ணை மணப்பதை விரும்பவில்லை. எனவே, உத்தமன் மனைவியாகிய வகுளாவை ஒளித்து வைத்து விட்டாள். கபோதகா கேட்ட பொழுது அவள் கூட்டிவர மறுத்து விட்டாள். அதனால் சினம் கொண்ட கபோதகன் மகளை ஊமையாகப் போகுமாறு சாபமிட்டான். இதுதான் உன் மனைவியின் நிலை” என்று முனிவர் சொல்ல, உத்தமன், பிராமணன் மனைவியைத் திருப்பித் தந்த ராட்சசன் உதவியை நாடினான். அந்த ராட்சசன் நாகலோகம் சென்று, கபோதகனின் கெட்ட குணத்தையும், வகுளாவின் குணத்தையும் மாற்றி விட்டான். பிறகு வகுளாவையும், கபோதகன் மகளையும் அழைத்து வந்த ராட்சசன் உத்தமனிடம்