பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 பதினெண் புராணங்கள் பிடித்துக் கொண்டு வெள்ளத்தைக் கடக்க முயன்றான். ஆனால் மான் தண்ணிருக்குள் புகுந்து பாதாள லோகம் சென்றது. பொன்மயமான அந்த நகருக்கு அழைத்துச் சென்ற மான், தன் கதையைச் சொல்லிற்று. போன ஜென்மத்தில் அந்த மான் உத்பலவதி என்ற பெயருடன் அவன் மனைவியாக இருந்தவள். அவள் சிறுமியாக இருந்தபொழுது அவள் அடுத்த பிறப்பில் மானாகப் பிறக்கக் கடவள் என்று சுதபா முனிவர் சாபம் கொடுத்தார். இப்பொழுது சுவரஷ்டிராவிற்கும், அந்த மானுக்கும் ஒரு மகன் பிறந்தான். அந்தப் பிள்ளை பிறக்கின்ற நேரத்தில் உலகம் முழுதும் இருண்டு கிடந்ததால் தாமசமனு என்று பெயரிடப்பட்டான். அந்தக் குழந்தை பெரியவனாகி சூரியனை நோக்கித் தவம் இருந்து பல ஆயுதங்களைப் பெற்று, தன் தந்தையை வென்றவனைப் பழி வாங்கி உலகம் முழுவதையும் வென்றான். இந்த நான்காவது மனுவின் காலத்தில் இந்திரப் பதவியில் இருந்தவன் விகி என்பவன் ஆவான். ஐந்தாவது மனுவின் கதை ரிதவக் என்ற முனிவர் நீண்ட காலம் மகப்பேறு இல்லாமல் இருந்தார். ரேவதி நட்சத்திரத்தில் ஒர் ஆண் குழந்தை பிறந்தது. எல்லாக் கெட்ட பழக்கங்களையும் பெற்ற அவன் தீயவனாக வாழ்ந்தான். இதனால் மனத்துயர் அடைந்த முனிவர் நோய்வாய்ப்பட்டார். அவர் மனைவி தொழுநோயால் பிடிக்கப்பட்டாள். இதன் காரணத்தை அறிய விரும்பிய ரிதவக் முனிவர், கார்க முனிவரை அடைந்து, "நான் நேர்மையானவன், தவம் செய்தவன். எனக்கு இப்படி ஒரு பிள்ளை பிறந்துள்ளது. நான் செய்த பாவத்தினாலா அல்லது என் மனைவி செய்த பாவத்தினாலா, அல்லது குழந்தை செய்த பாவத்தினாலா? எதனால் இப்படி ஒரு குழந்தை