பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பதினெண் புராணங்கள் இருந்த பிரசேதன சகோதரர்கள் கவனத்திற்கு வந்தது. இயற்கையின் இந்தச் சூழலை மாற்ற அவர்கள் தங்கள் வாயின் மூலம் நெருப்பையும், காற்றையும் உண்டாக்கினர். வனங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. உலகின் அழிவைக் கண்டு கலங்கிய சோமன் (சந்திரன்), ஒர் அழகிய பெண்ணுடன் பிரசேத சகோதரர்களிடம் வந்து, "நீங்கள் சினம் கொள்வதில் நியாயமில்லை. உலகை ஆள வேண்டிய நீங்கள் அத்தொழிலைத் துறந்து விட்டதால் இந்நிலை உருவாயிற்று. இப்பொழுது உலகை ஆள்வதற்கு மிக அவசரமாக ஒரு மன்னன் தேவை. இந்தப் பெண்ணை மணந்துகொண்டு அவள் மூலம் பிறக்கும் ஆண் மகவை அரசனாக்கிவிட்டால் உலகமும் செழித்து வளரும்; நீங்களும் இடையூறு இல்லாமல் தவத்தை மேற்கொள்ளலாம்” என்று கூறினான். பிரசேதர்கள் இதற்கு உடன்பட்டு அவளை மணந்து தட்சன் என்ற பிள்ளையைப் பெற்றனர். அவனே உலகத்திற்கு அரசனானான். "மக்களுக்குப் பிரஜை என்ற பெயருண்டு ஆதலால், அவர்களுக்கு பதியாக (அரசனாக உள்ள தட்சன் 'பிரஜாபதி என்று அழைக்கப்பட்டான்” என்று உரோம ஹர்ஷனர் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே, அதைக் கேட்டுக் கொண்டிருந்த முனிவர்கள் குறுக்கிட்டனர். “பெருமுனிவரே, தட்சன் என்பவன் பிரம்மனின் கால் கட்டை விரலில் இருந்து தோன்றினவன் என்றல்லவா நாங்கள் கேள்விப்பட்டிருந்தோம். அதற்கு எதிராக இப்பொழுது பிரசேதர்களின் மகன்தான் தட்சன் என்றால் எங்களுக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. தயவு கூர்ந்து விளக்க வேண்டும்” என்று கூறினார்கள். அதைக்கேட்ட உரோமஹர்ஷனர் "இதில் குழம்புவதற்கு எதுவுமே இல்லை. எத்தனையோ தட்சர்கள் தோன்றியுள்ளனர். அவர்களில் ஒரு தட்சன் நான்முகன் கால் கட்டை விரலில்