பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்கண்டேய புராணம் 323 - இதுவரை ஏழு மனுக்களில் ஏழு மன்வந்திரங்கள் விளக்கப் பட்டன. எட்டாவது மன்வந்திரம், சூரியனுக்கும் சாயாவுக்கும் பிறந்த சுரன்னி என்பவனுடைய மன்வந்திரம் ஆகும். இந்த மன்வந்திரத்தில் தைத்திய மன்னனாகிய வலி இந்திரனாவான். மது, கைடபன், மகாமாயா இரண்டாவது மன்வந்திரமாகிய ஸ்வரோசிஷா மன்வந்திரத்தில், சரதா என்று ஒர் அரசன் ஆட்சி செய்து வந்தான். சிலகாலம் கழித்துப் பகை அரசர்கள் அவனைத் தோற்கடித்து அவன் நாட்டைக் கைப்பற்றினர். மன்னன் தோல்வி அடைய அவனுடைய அமைச்சர்களில் சில துரோகிகளும் காரணமாக இருந்தனர். எல்லாவற்றையும் இழந்த மன்னன் காட்டிற்கு வந்து மேத்தா என்ற முனிவரின் ஆசிரமத்தில் தங்கி இருந்தான். அங்கு தங்கி இருந்தாலும் ஒயாமல் தன் நாட்டையும் மக்களையும் நினைத்துக் கொண்டே இருந்தான். ஒரு நாள் ஆசிரமத்திற்கு வெளியே வந்த பொழுது சமாதி என்ற வைசியனைச் சந்தித்தான். அவன் பெரிதும் வருந்தி இருந்ததால், நாட்டு மக்களின் நிலைமை எவ்வாறு உள்ளது என்று கேட்டான். தன்னுடைய மனைவி, பிள்ளைகளுமே தன் சொத்துக்களை எல்லாம் பறித்துக் கொண்டு தன்னை விரட்டி விட்டதை சமாதி சொல்லி அழுதான். இருவரும் சென்று முனிவர் மேத்தாவிடம் நடந்தவற்றைக் கூறி, ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? என்று கேட்டார்கள். அவர்கள் துயரக் கதையைக் கேட்ட மேத்தா முனிவர், "இது மகாமாயையின் திருவிளையாடலால் நடைபெறுகின்ற செயல்களாகும். இவை அனைத்தும் மாயையே. அதைப் புரிந்து கொண்டால் இதில் வருத்தப் படுவதற்கு எதுவுமே இல்லை” என்று கூறிவிட்டு, மகா மாயையின் திருவிளையாடலை விளக்க, மேத்தா முனிவர்