பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்கண்டேய புராணம் 325 மகிஷாசுர வதம் மேத்தா முனிவர் அரசிழந்த சுரதாவுக்கும், வீடிழந்த சமாதிக்கும் மகிஷாசுரன் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். முன்னொரு காலத்தில் புரந்தரன் என்பவன் இந்திரப் பதவி வகித்து வந்தான். மகிஷாசுரன் அசுரர் தலைவனாக இருந்தான். வழக்கம் போல் தேவாசுர யுத்தம் நூறு ஆண்டுகள் நடந்தன. அசுரர் கை ஓங்கியது. இந்திரர்களும் தேவர்களும் தேவருலகத்தில் இருந்து விரட்டப்பட்டனர். அவர்கள் பூவுலகைச் சுற்றித் திரிந்தார்கள். இந்திரனும், ஏனைய தேவர்களும் கூடி பிரம்மனிடத்தில் தங்கள் பரிதாப நிலையைக் கூறினர். தான் தனியே ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறிந்த பிரம்மன், அனைவரையும் அழைத்துக் கொண்டு சிவனும் விஷ்ணுவும் இருக்குமிடம் சென்றார். நடந்ததைக் கேட்ட சிவனும் விஷ்ணுவும் பெருங் கோபம் அடைந்தனர். அப்போது, அவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் மாபெரும் ஆற்றல் வெளிப்பட்டது. சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவரிடம் இருந்தும் வெளிப்பட்ட ஆற்றல் களோடு, இந்திரன் முதலிய எட்டுத் திக்குபாலர்களிடமிருந்தும் ஆற்றல் வெளிப்பட்டது. இந்தச் சக்திகள் அனைத்தும் ஒன்று கூடியவுடன் அழகிய பெண் வடிவு கொண்டு நின்றது. இந்த மகாசக்தியின் வடிவில் சிவனுடைய ஆற்றல் முகமாகவும், விஷ்ணுவின் ஆற்றல் கைகளாகவும், யமனுடைய ஆற்றல் முடியாகவும், சந்திரன் ஆற்றல் மார்பகங்களாகவும், இந்திரன் ஆற்றல் இடையாகவும், வருணன் ஆற்றல் தொடையாகவும் பிரம்மனின் ஆற்றல் பாதங்களாகவும், சூரியனின் ஆற்றல் கால் விரல்களாகவும், அஷ்ட வசுக்களின் ஆற்றல் கைவிரல்