பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 பதினெண் புராணங்கள் களாகவும், குபேரனின் ஆற்றல் மூக்காகவும், அக்னியின் ஆற்றல் மூன்று கண்களாகவும், பவனனின் ஆற்றல் காதுகளாகவும் உருவெடுத்தன. தங்கள் ஆற்றல் மூலம் வெளிப்பட்ட இப்பெண் உருவைப் பார்த்து தேவர்கள் பெரிதும் மகிழ்ந்தனர். இப்பெண்ணிற்குச் சிவன் திரிசூலத்தையும், விஷ்ணு சக்கரத்தையும், வருணன் சங்கையும், அக்னி சக்தியையும், வாயு அம்பு, வில், அம்பறாத்துாணி ஆகியவற்றையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், ஐராவதம் என்ற யானையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணியையும், யமன் நீண்ட கம்பையும், வருணன் பாசக் கயிற்றையும், தட்சன் மணிகள் பதித்த கழுத்து மாலையையும், பிரம்மன் ஒரு பாத்திரத்தில் புண்ணிய நீரை யும் கொடுத்தனர். சூரியன் தன் ஒளியினால் அவளுக்கு ஆற்றலையும், சந்திரன் ஒரு வாளும் கேடயமும், கடல் கழுத்து மாலையையும் துணிகளையும் கொடுத்தன. விஸ்வகர்மா கோடரிகள், கவசங்கள் முதலியவற்றைச் செய்து கொடுத்தான். வருணன் மாலைகளையும் தாமரை மலர்களையும், இமவான் ஆபரணங்களையும், ஏறிச் செலுத்த சிம்ம வாகனத்தையும், நாகங்களின் அரசன் பாம்புகளையும் மாலையினையும் கொடுத்தனர். ஏனைய தேவர்கள் தந்த மற்ற ஆயுதங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது. இந்த அலங்காரங்களுடன் புறப்பட்ட சக்தி வெடிச்சிரிப்புச் சிரிக்க ஆரம்பித்தாள். அந்தச் சிரிப்பின் ஒசையில் உலகங்கள் அதிர்ந்தன. அன்னையின் வடிவைக் கண்ட தேவர்கள் 'ஜெய ஜெய காளி' என்று கோஷமிட்டனர். முனிவர்களும் ரிஷிகளும் கைகூப்பி வணங்கினர். தேவர் உலகத்தில் ஒரு பகுதியில் ஏற்பட்ட இந்த சப்தத்தைக் காதில் வாங்கிய அசுரர்கள், என்ன நடக்கிறது என்று புரியாததால் சென்று பார்க்க விரும்பினர்.