பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்கண்டேய புராணம் 327 மகிஷாசுரன் படைகளைத் திரட்டிக் கொண்டு பார்க்கப் புறப்பட்டான். வந்தவனுக்கு அதுவரை தேவருலகத்தில் காணாத ஒரு காட்சி தென்பட்டது. ஒரு பெண் வடிவம் பெரிய சிங்கத்தின் மேலமர்ந்து இருப்பதைக் கண்டான். அந்தப் பெண்ணின் தரையில் ஊன்றிய இடது பாதம் பாதாளம் வரை சென்றது. அவளது திருமுடி விண்ணைப் பிளந்து கொண்டு மிக உயரத்தில் சென்றது. அவள் அமர்ந்திருக்கும் நிலை உலகம் முழுவதையும் வியாபித்து இருந்தது. அவளுடைய ஆயிரம் கைகள் திசைகள் அனைத்தையும் அணைப்பது போல் இருந்தன. அசுரர்கள் தேவியிடம் போர் புரியத் தொடங்கினர். போருக்கு முதலில் புறப்பட்டவன் மகிஷாசுரனின் படைத் தலைவனான சிக்ஷரா என்பவன் ஆவான். உதக்ரா, மஹாஹனு, சிலோமா, வஸ்கலா, பரிவரிதா, வீரலக்ஷா ஆகியோர் நால்வகைப் படையுடன் தாக்கியது போக ரதங்கள், யானைகள் ஆகியவற்றைக் கொண்டு தனித்தனியாகவும் தேவியைத் தாக்கினர். மகிஷாசுரன் கோடிக்கணக்கான யானைகள், குதிரைகள் ஆகியவற்றைக் கொண்டு எதிர்த்தான். பல்லாயிரக்கணக்கான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. அரக்கர்கள் பாசக்கயிறு, அம்பு, வாள் ஆகியவற்றைக் கொண்டு போர் புரிந்தனர். தேவி தன் ஆயுதங்களால் இவை அனைத்தையும் பொடி ஆக்கினாள். அவள் வாகனமாகிய சிம்மம், பகைவர்களைத் தின்று தீர்த்தது. தேவியின் மூச்சுக் காற்றிலிருந்து பல கணங்கள் உருவாகி, மற்ற அசுரர் களுடன் போர் புரிந்தனர். தேவி ஆயிரக்கணக்கான அசுரர் களைத் தன் சூலாயுதத்தாலும், சக்தியினாலும், வாளினாலும் அழித்தாள். சிலர் அவள் மணியோசை கேட்டு மயக்கமாயினர். பலர் அவளது பாசக்கயிற்றில் கட்டப்பட்டனர். பலர்