பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 பதினெண் புராணங்கள் கண், காது, கை, கால் எனப் பல உறுப்புகளை இழக்க வேண்டியதாயிற்று. இரத்த ஆறு ஓடியது. போர்க்களம் முழுவதும் இறந்து போன யானைகள், குதிரைகள், அசுரர்கள் ஆகியவற்றால் நிரம்பி இருந்தது. விநாடிப் பொழுதில் காய்ந்த மரங்களை நெருப்பு எரிப்பது போல் பகைவர்களை தேவி அம்பிகை எரித்தாள். தன்னுடைய சேனை பொடி சூரணம் ஆவதைக் கண்ட அசுரர் படைத்தலைவன் சிக்oரா சுமேரு மலையில் மேகங்கள் மழை பொழிவது போல் பாணங்களைப் பொழிந்தான். தேவி இவற்றைத் தடுத்து அவனுடைய குதிரைகள், ரதம், வில் ஆகியவற்றைப் பொடி செய்தாள். இறுதியாக ஈட்டியால் அவனைக் கொன்றாள். சிக்ஷீராவிற்குப் பிறகு சமரா, உதக்ரா, தம்ரா, உக்ரஸ்யா, மஹாஹனு ஆகியோரைக் கொன்ற பின்பு, துர்முகன், துர்தரா ஆகியோரை வில்லினால் கொன்றாள். தன் சேனை சின்னாபின்னப்படுவதைக் கண்ட மகிஷாசுரன், ஒர் எருமை வடிவைப் பெற்றுக் கொண்டு, தேவியைத் தாக்கினான். தேவியின் படைகளைத் தன் கொம்பு களால் கொன்றான். இறுதியாக அன்னை ஏறியிருந்த சிம்மத்தை மகிஷாசுரன் தாக்க முற்பட்டதும், தேவிக்குச் சினம் ஏற்பட்டது. மாபெரும் எருமை வடிவம் கொண்ட அசுரனின் கால் குளம்புகள் பூமியைப் பிளந்தன. எருமையின் வாலாட்டத்தால் கடல் கொந்தளித்தது. அக் கொம்புகளில் பட்ட மலைகள் பொடியாயின. ஆனால் தேவி எருமையைத் தன் பாசக் கயிற்றால் பிணித்தாள். தேவி எருமையைப் பிணித்ததும், அசுரன் எருமை வடிவை நீத்து சிம்ம வடிவம் கொண்டான். சிம்மத்தின் தலையைத் தேவி துணித்ததும், சிம்மத்தின் உடலிலிருந்து வாளோடு வெளிப்பட்டான் அசுரன். பல பாணங்களையும் ஆயுதங்