பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 பதினெண் புராணங்கள் களாகிய சும்ப, நிசும்பரிடம் ஒடிச் சென்றனர். அவர்களைப் பார்த்து, “அரசே, இந்திரன் அவனுடைய யானையாகிய ஐராவதம், அவர் குதிரை உச்சைஸ்ரவம், பாரிஜாதம் முதலிய அனைத்தும் தங்களிடம் இருக்கின்றன. இனித் தாங்கள் போர் செய்வதற்கும் யாருமில்லை; அடைய வேண்டிய பொருளும் எதுவுமில்லை. ஆனால் இன்று நாங்கள் கைலை மலையைச் சுற்றி வரும்பொழுது அம்பிகை என்ற பெண்ணைப் பார்த்தோம். அவளைப் பார்த்த பிறகு உங்கள் நிறைவான வாழ்க்கையில் உள்ள குறை தெரிந்தது. அவளை நீங்கள் மனைவியாகப் பெற்றுவிட்டால், அடைய வேண்டிய பேறு எதுவுமில்லை என்று கூறினர். அதைக்கேட்ட சும்பன் மகிழ்ச்சி அடைந்து, "அப்படி யானால் நீங்களே அவளிடம் சென்று நான் யார் என்பதை எடுத்துக் கூறி, அவளை மணக்கத் தயாராக இருக்கிறேன் என்ற செய்தியையும் சொல்லிவிட்டு வாருங்கள்” என்றான். அரசன் உத்தரவுப்படியே சண்டனும் முண்டனும் அம்பிகையிடம் வந்து கம்பனுடைய பெருமையையெல்லாம் எடுத்துக் கூறி, "அவர் தங்களை மணக்கத் தயாராக இருக்கிறார். உங்கள் சம்மதம் தேடி வந்தோம்” என்று கூறினர். அம்பிகை சிரித்துக் கொண்டே, "நான் ஒரு விரதம் பூண்டிருக்கிறேன். 'என்னை யார் போரில் தோற்கடிக்கின்றார்களோ அவர்களையே மணப்பது என்று இருக்கிறேன்" என்று கூறவே, சண்டனும் முண்டனும் அரசரிடம் ஒடிச் சென்று நடந்ததைக் கூறினர். ஒரு பெண்ணுக்கு இவ்வளவு துணிச்சலா என்று கோபம் கொண்ட சும்பன், பெரும் படையுடன் சென்று சண்டனும் முண்டனுமே அம்பிகையைத் தாக்க வேண்டுமென்று ஆணையிட்டான். சும்பனின் ஆணைப்படி சண்ட முண்டர்கள் பெரும் படையுடன் வந்து அம்பிகையை எதிர்த்தனர். சண்ட