பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 பதினெண் புராணங்கள் ஆணவத்தில் மிகுந்து நிற்கும் சும்பன் இதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அவன் போருக்குப் புறப்படும் பொழுது, அவன் படைகளில் மிக முக்கியமானவனான 'ரக்தவிஜா பெரும் படையுடன் போருக்கு வந்தான். அவன் உடம்பில் பல கணைகளைச் செலுத்தி உதிரம் உதிருமாறு செய்தாள் அம்பிகை. ஆனால் அவள் எதிர்பாராத ஒன்று அங்கே நடந்தது. அவன் இரத்தம் பூமியில் விழவும், ஒவ்வொரு சொட்டு இரத்தமும் அவனைப் போலவே ஒரு ரக்தவிஜாவாக மாறிவிட்டது. உடனே அம்பிகை காளியை விளித்து, "நீ வாயைத் திறந்து அவன் உடம்பிலிருந்து ஒரு சொட்டு இரத்தம் கூடக் கீழே விழாதபடி அதனை விழுங்கிவிடு!” என்று ஆணையிட்டாள். காளி அவ்வாறு செய்யவே, ரக்தவிஜாவின் வாழ்க்கை முடிந்தது. அதன்பிறகு அம்பிகை சும்ப, நிசும்பர்களோடு பெரும் போர் செய்து இருவரையும் இறுதியில் கொன்றுவிட்டாள். இக்கதையை சுரதா, சமாதி இருவருக்கும் கூறிவிட்டு மேத்தா முனிவர், தேவியின் திருவருளைப் பெற ஒரே வழி அவளைப் பிரார்த்திப்பதுதான் என்று கூறினார். அவர்கள் இருவரும் தவத்தை மேற்கொண்டனர். தேவி பிரசன்னமான வுடன் சுரதா, தோல்வியே காணாத மன்னனாகப் பிறக்க வேண்டும்" என்று வேண்டினான். அடுத்த பிறப்பில் 'சவர்ணி மனுவாகப் பிறப்பான் என்று அன்னை வரமளித்தாள். சமாதி, தேவியின் திருவருள் ஒன்றே போதும் என்று கூறி, உண்மையான ஞானத்தை அறிந்து கொண்டான். இதன்பிறகு மார்க்கண்டேய புராணத்தில் எட்டு முதல் பதினான்கு மன்வந்திரங்கள் இந்திரன் என்ற பெயருடன் இருப்பான் என்றும் யார் யார் சப்த ரிஷிகளாயிருப்பர் என்றும் தரப்பட்டுள்ளது