பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பதினெண் புராணங்கள் வந்து பிறக்க வேண்டும் என்பனவாகும். தட்சனுக்கு 60 பெண்கள் இருந்தார்கள். அவர்களுள் 27 பெண்களை சோமன் என்றழைக்கப்படும் சந்திரனும், பத்துப் பெண்களை தர்ம தேவதையும், எஞ்சிய பெண்களை ஆங்கீரசா முதலிய முனிவர்களும் மணம் செய்து கொண்டனர். இவருள் ப்ரியா என்பவளை மட்டும் பிரம்மன் மணந்து கொண்டான். தர்ம தேவதையை மணந்த பத்துப் பெண்களுள் அருந்ததிக்கு 'உலகத்திலுள்ள பொருள்கள்’ எனும் குழந்தைகளும், வசுவிற்கு "அஷ்டவசுக்கள் என்ற எட்டுக் குழந்தைகளும் பிறந்தன. அஷ்ட வசுக்களுள் ஒருவனாகிய அனலன் என்பவனுக்குக் “குமரன்” எனும் பிள்ளை பிறந்தான். இந்தக் குமரன் என்ற பிள்ளையை கார்த்திகைப் பெண்கள் வளர்த்தமையின் அவன் 'கார்த்திகேயன்’ எனப் பெயர் பெற்றான். அஷ்ட வசுக்களுள் ஒருவனாகிய பிரபசாவுக்கு விஸ்வகர்மா பிள்ளையாகப் பிறந்தான். விஸ்வகர்மா சிறந்த கட்டடக் கலைஞனாகவும், ஆபரணங்கள் செய்வதில் தேர்ந்தவ னாகவும் இருந்தான். சோமனை மணந்த 27 பெண்களும் 27 நட்சத்திரங்கள் எனப்பட்டனர். தட்சனுடைய எஞ்சிய பெண்களில் காசிப முனிவன் 13 பெண்களை மணந்தான். அவருள் அதிதி என்ற பெண்ணுக்கு 12 ஆதித்தர்களும், திதி என்ற பெண்ணுக்கு ஹிரண்யன், ஹிரண்யாக்ஷன் முதலிய அரக்கர்களும், அவர்கள் சகோதரியாகிய சிம்ஹிகாவிற்கு வாதாபி, வில்வலன், மாரீச்சன் முதலிய அரக்கர்களும் தோன்றினர். அர்ஷிதா என்ற பெண்ணுக்கு கந்தர்வர்கள் மக்களாகத் தோன்றினர். சுரசா என்பவளுக்குப் பாம்புகள் பிறந்தன. காஷா என்ற பெண்ணிற்கு குபேரனுக்கு நண்பர்களாகிய யக்ஷர்கள் தோன்றினர். சுரபியின் வயிற்றில் பசுக்களும், எருமைகளும் தோன்றின. வினதாவிற்குப் பறவைகளின்